ஹோம் /நியூஸ் /சேலம் /

ஓ.பி.எஸ் உடன் இணைய வாய்ப்பே இல்லை - எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!

ஓ.பி.எஸ் உடன் இணைய வாய்ப்பே இல்லை - எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!

இபிஎஸ்

இபிஎஸ்

அந்தந்த கட்சிக்கு அவரவர்கள் தான் நிர்வாகிகள், மற்ற கட்சி தலையிட வேண்டும் என சொல்பவர்கள் எப்படி கட்சிக்கு விஸ்வாசமாக இருப்பார்கள் என கேள்வி எழுப்பினார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Salem, India

  ஓபிஎஸுடம் இணைந்து செயல்பட 100% வாய்ப்பே இல்லை என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

  சேலம் மாவட்டம் எடப்பாடி பயணியர் மாளிகையில், இபிஎஸ் முன்னிலையில் எடப்பாடி நகராட்சி 12 வது வார்டு திமுக உறுப்பினர் ரவி தலைமையில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.

  இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

  கட்டணமில்லாமல் பேருந்தில் பயணம் செய்யும் பெண்களை அமைச்சரே இழிவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது எனவும் கூறினார்.

  இதையும் வாசிக்க: திருச்சி சிவா மகன் சூர்யாவுக்கு கைலாசாவின் தர்மரட்சகர் விருது - நித்யானாந்தா அறிவிப்பு

  பாஜக தலையிட்டு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோரை இணைத்து வைக்கலாம் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறியிருந்தார். இது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது, அந்தந்த கட்சிக்கு அவரவர்கள்தான் நிர்வாகிகள், மற்ற கட்சி தலையிட வேண்டும் என சொல்பவர்கள் எப்படி கட்சிக்கு விஸ்வாசமாக இருப்பார்கள் என கேள்வி எழுப்பினார்.

  மேலும் அதிமுகவிற்கு எதிராக செயல்படுபவர்கள் 100 சதவிகிதம் கட்சியில் இணைக்க வாய்ப்பில்லை எனவும் ஓ.பி.எஸிற்கு இனி அதிமுகவில் இடமில்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: ADMK, EPS, OPS - EPS