Home /News /salem /

திமுக அமைச்சர்களின் ஊழல்களை வெளிக்கொண்டு வந்தால் நாறிப்போகும்.. எச்சரிக்கை விடுத்த எடப்பாடி பழனிசாமி

திமுக அமைச்சர்களின் ஊழல்களை வெளிக்கொண்டு வந்தால் நாறிப்போகும்.. எச்சரிக்கை விடுத்த எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

கடந்த 14 மாத கால திமுக ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்பட வில்லை என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக அமைச்சர்களின் ஊழல்களை வெளிக்கொண்டு வந்தால் நாறிப்போகும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஒற்றைத் தலைமை சர்ச்சையால் அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடையே கடந்த சில நாட்களாக மோதல் நடந்து வந்த நிலையில், கடந்த 11ம்தேதி வானகரத்தில் நடைபெற்ற செயற்குழு, பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவியை மீண்டும்  உருவாக்குவது, இடைக்கால பொதுச்செயலாளர் நியமனம், 2017-ல் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை  ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து உள்ளிட்ட 16  தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன. இதனையடுத்து அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு  செய்யப்பட்டார்.

இதனையடுத்து சென்னையில் இருந்து சொந்த மாவட்டத்திற்கு திரும்பிய எடப்பாடி பழனிசாமிக்கு சேலம் மாவட்டம் தலைவாசல் பேருந்து நிலையம் அருகே சேலம் புறநகர் மாவட்ட கழகத்தின் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அவரை மேளம் தாளம் முழங்க உற்சாகமாக வரவேற்றனர்.  அப்போது விழா மேடைக்கு வருவதற்கு முன் எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்த அவர் அதிமுக, கொடியேற்றி வைத்தார்.

பின்னர் விழா மேடையில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி,  எம்ஜிஆர், புரட்சித்தலைவி கட்டிக் காத்த அதிமுகவை வலிமை பெறும்  வகையில் வழிநடத்த எனக்கு ஒரு வாய்ப்பு தந்துள்ளீர்கள். சேலம் மாவட்டம் அதிமுகவின், எஃகு கோட்டை. ஆளுங்கட்சியினர் அதிமுக, முன்னாள் அமைச்சர்களை வருமான வரித்துறையை கொண்டு அதிமுகவை ஒடுக்கி அழிக்க நினைக்கிறார்கள். திமுக, முன்னாள் அமைச்சர் ஆர்.எஸ்.பாரதி அதிமுக, உட்கட்சி விவகாரத்தில் தலையிட்டு ஊடகங்களில் பேட்டி அளிப்பது நல்லதற்கல்ல என்று  எச்சரிக்கை விடுத்ததோடு முன்னாள் திமுக அமைச்சர்கள் ஊழல்களை வெளிக்கொண்டு வந்தால் நாரிப்போகிடும் என்று எச்சரிக்கை விடுத்து பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்னர் சேலம் மாநகர் திருவாக்கவுண்டனூரில் அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளித்தனர்.

வரவேற்பினைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசும் போது, திமுக அரசு ஆட்சிக்கு வந்தபிறகு புதிய திட்டங்கள் எதையும் கொண்டுவரவில்லை. முந்தைய அதிமுக அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களையே முதலமைச்சர் திறந்து வைத்து வருகிறார். இன்னும் ஒரு வருட காலத்திற்கு அதிமுக அரசு திட்டங்களையே திறந்து வைக்க முடியும். அவ்வளவு அதிகமான திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றியது. புதிய மாவட்டங்கள், மருத்துவக் கல்லூரிகள் ஆகியவை அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டன. ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ-மாணவியர் மருத்துவராகும் வாய்ப்பினை 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.

தமிழகத்தில் அதிமுக மீண்டும் எப்போதும் ஆட்சிக்கு வரும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். எப்போது தேர்தல் நடத்தினாலும் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும். அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தையும் அரசே ஏற்கும் என அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது எந்த திட்டத்தை அறிவித்தாலும் அதற்காக ஒரு குழு அமைத்து விடுகிறது. திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட 37 குழுக்களால் ஏதும் பயனில்லாத நிலையில் உள்ளது. திறமையற்ற முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கிறார். அதனால் எதையும் செயல்படுத்த முடியவில்லை என்றார்.

அதிமுக ஆட்சியில் சிறந்த செயல்பாட்டிற்காக மத்திய அரசின் விருதுகளை பல்வேறு துறைகள் பெற்றன. தற்போது சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிக அளவில் நிகழ்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. போதைப் பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. பலமுறை எடுத்துக் கூறியும் உரிய நடவடிக்கை இல்லாததால்  போதைப் பொருள் புழக்கம் அதிக அளவில் உள்ளது என்ற அவர், அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களே வீழ்ந்து போவார்கள். அதிமுக சொந்த உழைப்பால்தான் நிலைத்து நிற்கிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழிநடத்திய கட்சிக்கு சேலத்தை சேர்ந்த எனக்கு இடைக்கால பொதுச்செயலாளர் வாய்ப்பினை பொதுக்குழு உறுப்பினர்கள் வாய்ப்பு அளித்துள்ளனர். மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைய துணை நிற்க வேண்டும் என்றார்.
Published by:Esakki Raja
First published:

Tags: Edappadi Palanisami, EPS, OPS - EPS

அடுத்த செய்தி