ஹோம் /நியூஸ் /சேலம் /

சேலம் கொங்கணாபுரம் வார சந்தையில் ரூ.6 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

சேலம் கொங்கணாபுரம் வார சந்தையில் ரூ.6 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

கொங்கணாபுரம் வார சந்தை

கொங்கணாபுரம் வார சந்தை

Konkanapuram weekly Goat market | எடப்பாடி, கொங்கணாபுரம், சின்னப்பம்பட்டி, சங்ககிரி, ஆட்டையாம்பட்டி உட்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வாங்கி சென்றனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India

எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் வார சந்தையில் தைப்பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரூ.6 கோடி ரூபாய்க்கு ஆடு, கோழி விற்பனையானது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் பேரூராட்சி சார்பாக சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இதில் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும் எடப்பாடி, கொங்கணாபுரம், சின்னப்பம்பட்டி, சங்ககிரி, ஆட்டையாம்பட்டி உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆடுகளை வாங்கி செல்கின்றனர்.

கொங்கணாபுரம் வாரச் சந்தையில் சுமார் 10,000 ஆடுகள் விற்பனையானது. சராசரியாக ஆடு ஒன்று ரூ.8,000 முதல் ரூ.15,000 ரூபாய் வரை விற்பனையானது. அதேபோல் ரூ.3,000 -க்கு சண்டை சேவல்கள் விற்பனையானது சராசரியாக ஒரு சேவலின் விலை ரூ.2,000 முதல் ரூ.5,000 ரூபாய் வரை விற்பனையானது. இன்று மட்டும் கொங்கணாபுரம் வாரச்சந்தையில் சுமார் ரூ.6 கோடிக்கு கால்நடைகல் விற்பனையாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Pongal 2023, Salem