ஹோம் /நியூஸ் /சேலம் /

உறவினர் மரணம்... உடனடியாக டூவீலரில் கிளம்பிய எடப்பாடி பழனிசாமி... வைரல் வீடியோ

உறவினர் மரணம்... உடனடியாக டூவீலரில் கிளம்பிய எடப்பாடி பழனிசாமி... வைரல் வீடியோ

எடப்பாடி பழனிசாமி வைரல் வீடியோ

எடப்பாடி பழனிசாமி வைரல் வீடியோ

பொங்கல் விழாவை கொண்டாடாமல் அங்கிருந்த ஒரு பத்திரிக்கையாளரின் இரு சக்கர வாகனத்தை வாங்கி கிளம்பினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உறவினரின் இறப்பு செய்தி அறிந்து அவசர அவசரமாக இரு சக்கர வாகனத்தில் கிளம்பி சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவரது சொந்த ஊரான எடப்பாடி அடுத்த சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள அவரது தோட்டத்தில் பொங்கல் விழா கொண்டாடுவதற்காக சென்றுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு பொங்கல் விழா கொண்டாட தயாராக இருந்தது.

எடப்பாடி பழனிசாமியின் உறவினர் பழனிச்சாமி என்பவர் உயிரிழந்த தகவல் கிடைத்ததும் உடனடியாக பொங்கல் விழாவை கொண்டாடாமல் அங்கிருந்த ஒரு பத்திரிக்கையாளரின் இரு சக்கர வாகனத்தை வாங்கி கிளம்பினார். அவரின் உதவியாளர் இருசக்கர வாகனத்தை ஓட்ட அவர் பின்னால் அமர்ந்து அவசர அவசரமாக புறப்பட்டு சென்றார்.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

First published:

Tags: EPS, Trending Video, Viral Video