ஹோம் /நியூஸ் /சேலம் /

'தை பிறந்துவிட்டது.. அதிமுகவுக்கும் வழி பிறந்துவிட்டது' - பொங்கல் நிகழ்ச்சியில் பேசிய பழனிசாமி!

'தை பிறந்துவிட்டது.. அதிமுகவுக்கும் வழி பிறந்துவிட்டது' - பொங்கல் நிகழ்ச்சியில் பேசிய பழனிசாமி!

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

Salem edapadi palanisamy | தலைவாசல் சிறுவாச்சூரில் நடந்த பொங்கல் விழாவில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Salem | Salem

விவசாயிகளை காக்க திமுக அரசு மறந்துவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் தலைவாசல் சிறுவாச்சூரில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் வைக்கும் நிகழ்வை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,  தை பிறந்தால் வழி பிறக்கும். தற்போது தை பிறந்து விட்டது. அதிமுகவிற்கும் வழி பிறந்துவிட்டது. இங்கு மிக எழிச்சியாக பொங்கல் திருவிழா நடக்கிறது. இங்கு திரளான பெண்கள் பங்கேற்று பொங்கல் வைத்துள்ளனர் அனைவருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்; விவசாய தொழிலாளர்களுக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள் என  தெரிவித்தார்.

இந்த விழாவில் பங்கேற்பதால் எனது உள்ளத்தில் மகிழ்வு ஏற்பட்டிருக்கிறது நானும் ஒரு விவசாயி; விவசாய பெருமக்களோடு கலந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

விவசாயிகளை காக்க இந்த திமுக அரசு மறந்துவிட்டது. கடந்தாண்டு திமுக அரசு பொங்கல் தொகுப்பு வழங்கியது. எப்பேர்ப்பட்ட பொங்கல் தொகுப்பு வழங்கியது என அனைவருக்கும் தெரியும். முதன்முறையாக பொங்கல் தொகுப்பு கொடுத்தது அதிமுக அரசு.கிராமப்புறம் முழுவதும் மகிழ்ச்சியாக பொங்கலை கொண்டாட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. பொங்கல் தொகுப்பு வழங்கிய போது ஒவ்வொரு குடும்ப அட்டைக்குமரூபாய் 2500 வழங்கினோம்.இது தவிர பச்சரிசி ,முந்திரி சர்க்கரை, கரும்பு போன்றவையும் கொடுத்தோம். ஆனால் இந்தாண்டு கரும்பு கொடுக்க மறந்து விட்டனர் . விவசாயிகள் போராடியதற்கு பிறகே கரும்பு வழங்கப்பட்டது. இந்த திராவிட மாடல் ஆட்சியில் விவசாயிகள் என்ன பயன் அடைந்தனர் என்ன லாபம் பெற்றனர். இந்த ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என பேசினார்.

மின் கட்டணம் உயர்ந்து விட்டது. வீட்டு வரியையும் உயர்த்தி விட்டனர். பல்வேறு மாவட்டங்களில் கோமாரி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது எல்லா கிராமத்துக்கும் கால்நடை மருத்துவர்களை அனுப்பி கோமாரி நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு சிகிச்சை அளித்து குணமாக வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் முதலமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார் .இது குறித்து தமிழக சட்டமன்றத்திலும் பேசினேன் முழுக்க முழுக்க விவசாயிகளின் அரசு அதிமுக அரசு தான் என தெரிவித்தார்.

First published:

Tags: Cm edapadi palanisami, EPS, Local News, Salem