முகப்பு /செய்தி /சேலம் / கோயிலுக்குள் செல்ல முற்பட்ட பட்டியலின இளைஞர்... மிரட்டல் விடுத்த திமுக ஒன்றிய செயலாளர்!

கோயிலுக்குள் செல்ல முற்பட்ட பட்டியலின இளைஞர்... மிரட்டல் விடுத்த திமுக ஒன்றிய செயலாளர்!

தலித் இளைஞருக்கு கொலை மிரட்டல் விடும் திமுக ஒன்றிய செயலாளர்

தலித் இளைஞருக்கு கொலை மிரட்டல் விடும் திமுக ஒன்றிய செயலாளர்

அப்போது அந்த இளைஞரை அவரது தாய், தந்தை மற்றும் அங்குள்ள வேற்று சமூக மக்கள் முன்னிலையில் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை, மிரட்டல் விடுத்து தாக்க முற்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Salem, India

கோவிலில் நுழைய முற்பட்ட பட்டியலின இளைஞரை திமுக ஒன்றிய செயலாளரும் ஊராட்சி மன்ற தலைவருமான மாணிக்கம்,  மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் சூரமங்கலம் காவல் எல்லைக்கு உட்பட்ட திருமலைக்கிரியில் பட்டியலின இளைஞர் ஒருவர், கடந்த 26ஆம் தேதி இரவு திருமலைகிரியில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் கருவறை முன்பு நின்று சாமி கும்பிட வேண்டுமென்று கூறியுள்ளார்.

அதற்கு அங்குள்ள மாற்று சமூகத்தை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த இளைஞர் திரும்ப வந்துவிட்டார். இந்த விஷயத்தை அப்பகுதியில் உள்ள மக்கள் திமுக சேலம் ஒன்றிய செயலாளரும் தற்போதைய திருமலைகிரி ஊராட்சி மன்ற தலைவருமான மாணிக்கம்  என்பவரிடம் கூறியுள்ளனர். அவர் திருமலைகிரி ஊர் பெரிய மாரியம்மன் கோவில் முன்பு பஞ்சாயத்து கூட்டி 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை, கோயிலுக்குள் செல்ல வேண்டுமென கேட்ட பட்டியலின இளைஞர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் சொல்லி கோவிலுக்கு வர சொல்லியுள்ளனர்.

இதனையடுத்து அந்த இளைஞர் மற்றும் அவரது குடும்பத்தினர் கோயிலுக்கு சென்றுள்ளனர். அப்போது அந்த இளைஞரை அவரது தாய், தந்தை மற்றும் அங்குள்ள வேற்று சமூக மக்கள் முன்னிலையில் தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டல் விடுத்து தாக்க முற்பட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: DMK cadres, Salem, Threatened a Dalit