முகப்பு /செய்தி /சேலம் / பட்டியலின இளைஞரை மிரட்டிய விவகாரம்.. திமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகி கைது!

பட்டியலின இளைஞரை மிரட்டிய விவகாரம்.. திமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகி கைது!

தலித் இளைஞருக்கு கொலை மிரட்டல் விடும் திமுக ஒன்றிய செயலாளர்

தலித் இளைஞருக்கு கொலை மிரட்டல் விடும் திமுக ஒன்றிய செயலாளர்

அந்த இளைஞரை அவரது தாய், தந்தை மற்றும் அங்குள்ள வேறு சமூக மக்கள் முன்னிலையில் தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டல் விடுத்து தாக்க முற்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Salem, India

கோயிலுக்குள் செல்ல முற்பட்ட பட்டியலின இளைஞரை பட்டியலின இளைஞரை ஆபாச வார்த்தைகளால் திட்டிய விவகாரத்தில் திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணிக்கம் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

சேலம் சூரமங்கலம் காவல் எல்லைக்கு உட்பட்ட திருமலைக்கிரியில் பட்டியலின இளைஞர் ஒருவர், கடந்த 26ஆம் தேதி இரவு திருமலைகிரியில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் கருவறை முன்பு நின்று சாமி கும்பிட வேண்டுமென்று கூறியுள்ளார்.

அதற்கு அங்குள்ள வேறு சமூகத்தை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த இளைஞர் திரும்ப வந்துவிட்டார். இந்த விஷயத்தை அப்பகுதியில் உள்ள மக்கள் திமுக சேலம் ஒன்றிய செயலாளரும் தற்போதைய திருமலைகிரி ஊராட்சி மன்ற தலைவருமான மாணிக்கம் என்பவரிடம் கூறியுள்ளனர். அவர் திருமலைகிரி ஊர் பெரிய மாரியம்மன் கோவில் முன்பு பஞ்சாயத்து கூட்டி 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை, கோயிலுக்குள் செல்ல வேண்டுமென கேட்ட பட்டியலின இளைஞர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் சொல்லி கோவிலுக்கு வர சொல்லியுள்ளனர்.

இதனையடுத்து அந்த இளைஞர் மற்றும் அவரது குடும்பத்தினர் கோயிலுக்கு சென்றுள்ளனர். அப்போது அந்த இளைஞரை அவரது தாய், தந்தை மற்றும் அங்குள்ள வேறு சமூக மக்கள் முன்னிலையில் தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டல் விடுத்து தாக்க முற்பட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைதொடர்ந்து ஒன்றிய செயலாளர் மாணிக்கம் மீது திமுக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அவரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார். இந்நிலையில் காவல்துறையினர் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கத்தை கைது செய்தனர். அவர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம், ஆபாச வார்த்தைகளால் திட்டுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

First published:

Tags: DMK, DMK party, Threatened a Dalit