ஹோம் /நியூஸ் /சேலம் /

ஆத்தூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்து கள்ளச்சாராயம் விற்ற திமுக பிரமுகர் கைது

ஆத்தூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்து கள்ளச்சாராயம் விற்ற திமுக பிரமுகர் கைது

பறிமுதல் செய்யப்பட்ட கள்ளச்சாராய பாக்கெட்டுகள், கைதானவர்

பறிமுதல் செய்யப்பட்ட கள்ளச்சாராய பாக்கெட்டுகள், கைதானவர்

Dmk Person Arrested | ஆத்தூர் அருகே குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்த திமுக பிரமுகரை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India

சேலம்  மாவட்டம் வீரகனூர்  அதன் சுற்றுவட்டார  பகுதிகளான ராயர்பாளையம், லத்துவாடி, திட்டச்சேரி, உடும்பியம், சொக்கனூர், வெள்ளையூர், புளியங்குறிச்சி, வேப்பம்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் படுஜோராக விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தொடர்ந்து  புகார் சென்றது.

இது தொடர்பாக போலீஸார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், வீரகனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ராயர்பாளையம் குடியிருப்பு பகுதியில் வின்ஸ்டார் ட்ராவல்ஸ் நடத்திவரும் செல்வம் என்பவர் தனது வீட்டில் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருவதாக தலைவாசல் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க : குவார்ட்டருக்கு ரூ.10 கூடுதலாக வசூல்... அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

அதன்பேரில் மாறுவேடத்தில் அங்கு சென்ற போலீசார் சாராய பாக்கெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த திமுக பிரமுகர் செல்வத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். வீட்டில் பதுக்கி வைத்திருந்த 110 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

Published by:Karthi K
First published:

Tags: Arrested, DMK, Salem