Home /News /salem /

தண்ணீர் பிடிப்பதில் தகராறு.. கட்டையால் அடித்து மாமியாரை கொன்று மருமகளும் தற்கொலை!

தண்ணீர் பிடிப்பதில் தகராறு.. கட்டையால் அடித்து மாமியாரை கொன்று மருமகளும் தற்கொலை!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் மாமியாரை கட்டையால் அடித்தே கொலை செய்துள்ளார் மருமகள் ஒருவர். கொலை செய்த மருமகளும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் நடந்தது என்ன?

சாதாரண குழாய் சண்டை இரண்டு உயிர்களை பறித்துள்ளது... மாமியாரை கட்டையால் அடித்து கொலை செய்த மருமகள் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் பின்னணி என்ன?

சேலம் மாவட்டம் , எடப்பாடி அடுத்த குரும்பப்பட்டி கிராத்தை சேர்ந்தவர் 75 வயதான தைலம்மாள். இவருக்கு மூன்று மகன்கள் இரண்டு மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆன நிலையில் கணவரும் இறந்த நிலையில் தைலம்மாள் தனக்கு சொந்தமான நிலத்தில் தனி குடிசையில் வசித்து வந்துள்ளார்.

அதே நிலத்தில் தனி வீட்டில் தைலம்மாளின் கடைசி மகன் 47 வயதான மெய்வேலும் 43 வயதான மனைவி செல்வியுடன் வசித்து வந்துள்ளனர். தைலம்மாள் வீட்டின் வாசலில் தான் அந்த பகுதி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் குடிநீர் குழாய் இருந்துள்ளது.

இந்த குடிநீர் பிடிப்பது தொடர்பாக ஊர்மக்களிடம் செல்வி தகராறில் ஈடுப்படுவது வழக்கம் அதே போன்று தனது மாமியாரையும் தண்ணீர் பிடிக்க விடாமல் தொந்தரவு செய்து வந்துள்ளார் செல்வி.

குழாயில் யார் முதலில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை காலை மாமியார் மருமகள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த செல்வி மாமியார் தைலம்மாளை அருகில் இருந்த கட்டையை எடுத்து மண்டையில் அடித்துள்ளார். இதில் தைலம்மாள் அலறித்துடித்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தைலம்மாளை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் உறவினர்கள் வீட்டிற்கு வந்து செல்வியை தேடிய போது வீட்டின் கதவு பூட்டிய நிலையில் இருந்துள்ளது. சந்தேகமடைந்த உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது செல்வி வீட்டின் உள்ளே சடலமாக தொங்கியுள்ளார்.

கொலை, தற்கொலை இந்த இரண்டு சம்பவம் தொடர்பாக தகவல் அறித்து வந்த கொங்கணாபுரம் போலீசார் இரண்டு சடலங்களையும் கைபற்றிவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published by:Esakki Raja
First published:

Tags: Salem

அடுத்த செய்தி