Home /News /salem /

300க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாசப் படம்.. இணையதளங்களுக்கு விற்பனையா? போலீசார் தீவிர விசாரணை

300க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாசப் படம்.. இணையதளங்களுக்கு விற்பனையா? போலீசார் தீவிர விசாரணை

நடிகையாக்குவதாக கூறி ஆபாச படம் எடுத்து இளம்பெண்களின் வாழ்க்கையை சீரழித்த இயக்குனர் கைது

நடிகையாக்குவதாக கூறி ஆபாச படம் எடுத்து இளம்பெண்களின் வாழ்க்கையை சீரழித்த இயக்குனர் கைது

நடிகையாக்குவதாக கூறி ஆபாச படம் எடுத்து இளம்பெண்களின் வாழ்க்கையை சீரழித்த இயக்குனர் கைது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Salem
சேலத்தில் சினிமா கம்பெனி நடத்தி இளம்பெண்களை ஆபாச படமெடுத்து சீரழித்த இயக்குநரை கைது செய்த போலீசார், வீடியோக்களை இணையதளங்களுக்கு விற்பனை செய்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சேலம் ஏவிஆர் ரவுண்டானா பகுதியில் தனியார் கட்டிடத்தில் இயங்கிய சினிமா அலுவலகத்தில்,   நடிகையாக்குவதாக கூறி இளம்பெண்களை ஆபாச படங்கள், வீடியோக்கள் எடுத்ததாக சேலம் மாவட்டம் இடைப்பாடியை சேர்ந்த இயக்குநர் வேல்சத்ரியன் (38), மற்றும் அவரது பெண் உதவியாளர் ஜெயஜோதி (23) ஆகியோரை சூரமங்கலம் போலீசார் கைது செய்தனர். அந்த சினிமா அலுவலகத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 30க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்குகள், கணினி, லேப்டாப், கேமரா, பென் டிரைவ் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.



அதில், 300க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச படங்கள் இருப்பதாகவும், அப்பெண்களை மிக மோசமாக படமெடுத்து சீரழித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கள்ளக்குறிச்சி, சென்னை என பல்வேறு இடங்களில் இருந்து வந்த இளம்பெண்கள், இயக்குநர் வேல்சத்ரியனிடம் ஏமாந்துள்ளனர். மேலும், இளம் பெண் ஒருவரின் தாயாரிடம், சினிமானா தப்பு, ரைட் எல்லாமே இருக்கும் என இயக்குனர் பேசும் ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ | பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான செய்திகளை வெளியிட தடை!
 இயக்குனர் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இயக்குநர் வேல்சத்ரியனிடம் ஏமாந்த ஏராளமான பெண்கள், சேலம் போலீஸ் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு, தங்களின்  வீடியோக்களை அழித்து, தங்கள் வாழ்வை காப்பாற்றுங்கள் என  ரகசியமாக புகார் கொடுத்து வருவதாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  அந்த புகாரின் பேரில், அதிகாரிகள் மேல் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

போலீசார் கைப்பற்றிய ஹார்டு டிஸ்குகளில் இருக்கும் இளம்பெண்களின் ஆபாச படங்களை, இயக்குநர் வேல்சத்ரியன் பல்வேறு ஆபாச இணையதளங்களுக்கு விற்பனை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் - திருமலை, சேலம்
Published by:Anupriyam K
First published:

Tags: Arrest, Director, Porn websites, Salem

அடுத்த செய்தி