ஹோம் /நியூஸ் /சேலம் /

குழந்தை பாக்கியம் வேண்டி கும்ப படையல்.. சேலம் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

குழந்தை பாக்கியம் வேண்டி கும்ப படையல்.. சேலம் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

சேலம் - குழந்தை பாக்கியம் வேண்டி கும்ப படையல்.

சேலம் - குழந்தை பாக்கியம் வேண்டி கும்ப படையல்.

குழந்தை பாக்கியம் வேண்டி கும்ப படையல் வாங்குவதற்காக சேலம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India

    சேலம் சாமிநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள இந்த திருக்கோயிலில் கார்த்திகை மாத அமாவாசையையொட்டி அம்மனுக்கு காய்கறிகள், சிறுதானியங்கள், கீரை வகைகளை சாதத்துடன் கலந்து கும்ப படையல் என்ற பெயரில் படையல் வைத்து பூஜை செய்யப்பட்டன. இந்த படையலை வாங்கி செல்லும் பக்தர்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், நோய் நொடிகள் தீரும் என்பது ஐதீகமாக உள்ளது.

    இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து, குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டியும், திருமண வரம் வேண்டி ஒரு ரூபாய் நாணயத்தை மஞ்சள் துணியில் சூலாயுதத்தில் கட்டியும் வேண்டுதல் வைத்தனர்.

    ' isDesktop="true" id="843010" youtubeid="ZKJaCTf7KdA" category="salem">

    Also see... திருப்பதியில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு தரிசன டிக்கெட்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேவஸ்தானம்!

    பக்தர்களின் கூட்டம் அதிகரித்ததால் கூடுதலாக 300 கிலோ அளவிலான உணவு வகைகள் சமைத்து வேண்டுதல் நிறைவேற பிரசாதமாக வழங்கப்பட்டது.

    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Salem