சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே கொண்டையம்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள வீரபத்திரன் சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் ஆடிப் பெருக்கை ஒட்டி குருமன்ஸ் இனத்தை சேர்ந்தவர்கள் தலையில் தேங்காய் உடைத்தும் பொங்கல் வைத்தும் சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் திருவிழா நடத்துவது வழக்கம். தேங்காய் சிதறும் போது பக்தர்களின் துன்பங்கள் யாவும் சிதறிப்போகும் என்பது ஐதீகம்.
இதனிடையே கொரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு ஆண்டிற்கு பின்பு நடைபெற்ற இந்த கோவில் திருவிழாவில், பக்தர்கள் ஆடி ஒன்றாம் தேதி முதல் காப்பு கட்டி விரதம் இருந்தனர். இதனை தொடர்ந்து சுவேத நதியில் இருந்து தீர்த்தத்துடன் வீரபத்திரன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து ஊரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக தூக்கி சென்று பொதுமக்களுக்கு அருள் பாலித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பின்னர், கோவில் வளாகத்தில் அமர்த்தப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் திருமணம் நடக்க வேண்டியும், பேய் பிடித்திருந்தால் நீங்கும் என்ற நம்பிக்கையிலும், குழந்தை பாக்கியம் வேண்டியும் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் கோவில் பூசாரி தேங்காய் உடைத்து நூதன வழிபாடு செய்து, நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
Must Read : கொடைக்கானல் அருவியில் போட்டோ எடுக்கும் போது தவறி விழுந்த இளைஞர் மாயம் - பதைபதைக்கும் காட்சிகள்
முன்னதாக பக்தர்கள் வீரபத்திரன் சுவாமிக்கு ஊரணி பொங்கல் வைத்தும் சிறப்பு வழிபாடு செய்தனர். இந்த ஆடிப்பெருக்கு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வீரபத்திரன் சுவாமியை தரிசனம் செய்து வழிபட்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.