ஹோம் /நியூஸ் /சேலம் /

இரும்பு கடை உரிமையாளரை கத்தியால் குத்தி கொலை செய்த வடமாநில சிறுவர்கள்.. ஓமலூரில் சினிமாவை மிஞ்சும் பயங்கரம்...

இரும்பு கடை உரிமையாளரை கத்தியால் குத்தி கொலை செய்த வடமாநில சிறுவர்கள்.. ஓமலூரில் சினிமாவை மிஞ்சும் பயங்கரம்...

கொலையானவர்

கொலையானவர்

Salem Crime : ஓமலூர் அருகே இரும்பு கடை முதலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த இரண்டு வட மாநில சிறுவர்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Salem, India

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி தாலுகா  தீவட்டிப்பட்டி பகுதியில் சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இரும்பு கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையை தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள துறிஞ்சிப்பட்டி நடூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்(32) மற்றும் காடையாம்பட்டி சந்தைப்பேட்டை செட்டியார் காடு பகுதியை சேர்ந்த பிரேம்குமார் ஆகிய இருவரும் கூட்டாக நடத்தி வருகின்றனர்.

இந்த கடையில் பீகார் மாநிலம் பேகுசிரா மாவட்டத்தை சேர்ந்த  இரண்டு சிறுவர்கள் இரும்பு கடையிலேயே தங்கியிருந்து வேலை செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு சந்தோஷ், பிரேம்குமார் இருவரும் இரும்பு கடையை பூட்டிவிட்டு வியாபாரம் செய்த ரூ.4 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தனர். அப்போது கடையில் வேலை செய்த வடமாநில சிறுவர்கள் இரண்டு பேர் இரும்பு கடை உரிமையாளர்கள் இருவரையும் கத்தியால் சரமாரி குத்தினர். பின்னர் பணத்தை கொள்ளையடித்து செல்ல முயன்றனர்.

இதையும் படிங்க : புத்தாண்டு 2023: சென்னையில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு.. மீறினால் நடவடிக்கை மக்களே!

அப்போது அதிஷ்டவசமாக பிரேம்குமார் தப்பினார். ஆனால் சந்தோஷை இரண்டு சிறுவர்களும் தொடை மற்றும் வயிறு உள்ளிட்ட பகுதிகளில் மேலும் கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்துள்ளார்.

இதையடுத்து, பிரேம்குமார் சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு சாலையில் இருந்த பொதுமக்கள் உள்ளே சென்று ஒரு சிறுவனை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து படுகாயம் அடைந்த சந்தோஷை ஆம்புலன்ஸ் மூலம் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சந்தோஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் தப்பியோடிய மற்றொரு வடமாநில சிறுவனையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா நேரில் சென்று விசாரணை நடத்தினார்.  வடமாநில சிறுவர்கள் தங்கி இருந்த அறையை சோதனை செய்து தடயங்களை சேகரித்தனர்.  தொடர்ந்து கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு அங்கிருந்த ரத்த மாதிரி மற்றும் கொலைக்கு பயன்படுத்திய கத்தி ஆகியவைகளை சேகரித்தனர். மேலும் தடயவியல் நிபுணர் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர்.

இரும்பு கடை உரிமையாளரிடம் பணத்தை அபகரிக்கும் நோக்கத்தோடு வடமாநில சிறுவர்கள்  கடை உரிமையாளரை கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது பற்றி தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

First published:

Tags: Crime News, Local News, Salem