Home /News /salem /

சேலத்தில் வீடு புகுந்து வாலிபர் வெட்டிக்கொலை.. திடுக்கிடும் தகவல்

சேலத்தில் வீடு புகுந்து வாலிபர் வெட்டிக்கொலை.. திடுக்கிடும் தகவல்

மர்மமான முறையில் வாலிபர் மரணம்

மர்மமான முறையில் வாலிபர் மரணம்

Salem : சேலத்தில் பட்டப் பகலில் வீடு புகுந்து வாலிபரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
சேலம்  மாவட்டம்  கெங்கவல்லி  பேரூராட்சிக்கு  உட்பட்ட 11 வது  வார்டு  தெற்கு வீதி  மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முருகன்  என்கிற சதீஷ் (வயது 42). இவர் தெற்குகாடு பகுதியைச் சேர்ந்த வனிதா (வயது 30) என்பவரை கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார், இந்த தம்பதிக்கு 8 வயதில் சர்வேஷ் என்கிற  ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வரும் வனிதா பள்ளிக்கு சென்று விட்டு நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார், அப்போது வீட்டினுள் காதல் கணவர் கத்தியால் சரமாரியாக வெட்டப்பட்டு இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தவர் அழுது கூச்சலிட்டுள்ளார், இதையறிந்த அக்கம்பக்கத்தினர் கெங்கவல்லி காவல் நிலையத்திற்கு தகவல் தெரித்துள்ளனர்.

உடனே சம்பவ இடத்திற்கு வந்த  மாவட்ட எஸ்.பி ஸ்ரீஅபிநவ், கைரேகை நிபுணர்கள் மற்றும் லில்லி என்கிற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர், பின்னர் இரத்த வெள்ளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த  முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு போலீசார்  அனுப்பி வைத்தனர். அவரது மனைவி வனிதா மற்றும் நண்பர்களிடம் போலீசார் விசாரணை  மேற்கொண்டனர்.

போலீசார்  நடத்திய விசாரணையில் முருகன் எந்த வேலைக்கும் செல்லாமல் பல பேரிடம் 20 இலட்சம் ரூபாய்க்கு மேல் கடன்  பெற்றுள்ளதாகவும், ஓய்வு  பெற்று இறந்து  போன  அவரது தந்தை  மோகனின்  பென்ஷன்  பணத்தை வைத்து அதன் மூலம்  குடும்பம்  நடத்தி  வந்ததாகவும் தெரியவந்துள்ளது. கடன்  கொடுத்தவர்கள்  பணம்  கேட்டு தொந்தரவு  செய்துவந்துள்ளனர். இந்நிலையில்  வாங்கிய  கடன்  தொகைக்காக  தான் குடியிருக்கும் சொந்த வீட்டின் மீது  நண்பர்கள் உதவியுடன் வாழப்பாடியில் உள்ள ஒரு நபரிடம் 20 லட்சம் ரூபாய் கடன் கேட்டுள்ளார்.

Also Read:  கள்ளக்குறிச்சி கலவரம் : போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்த நபர்கள் கைது

அதற்கான முன் தொகையாக ஆகஸ்ட் மாதம் முதல் தேதியில் ரூ.4 லட்சம் அதன் பின்னர் 11ம் தேதி ரூ.5 லட்சம்  சம்பவத்தன்று நேற்று, ரூ, 2,67,000 பெற்றுள்ளார். மீதி தொகையை புதன் கிழமை பெற்றுக்கொண்டு சேல்  அக்ரிமெண்ட்  போட்டு கொள்வதாக ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த நிலையில்  பணத்தை பெற்று கொண்ட முருகன் சில்லரை கடன்களை கொடுத்து விட்டு, ஒன்றரை இலட்சம் ரூபாயை வீட்டில் வைத்திருந்துள்ளார், பணத்தை பெற்று கொண்டதையறிந்த கடன் கொடுத்தவர்கள் சிலர், முருகன் வீட்டிற்கு சென்று சமையலறைக்கு அருகில் அமர்ந்து,  கொடுத்த பணத்தை முழுவதும் திருப்பி கொடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

அப்போது முருகனுக்கும் கடன் கொடுத்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மறைத்து வைத்திருந்த  கத்தியால் முருகனின் கழுத்து, கை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு வீட்டில் இருந்த ரூ1.5 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பியோடியது தெரியவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனையடுத்து இன்ஸ்பெக்டர், மற்றும் எஸ்.ஐ, தலைமையில் மூன்று தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இதனிடையே மோப்ப நாய் லில்லி சம்பவ இடத்தில் இருந்து கடம்பூர் செல்லும் சாலை வரை சென்று திரும்பியது, மழை பெய்ததால் எந்த தடயமும் கிடைக்காததால் போலீசார் திணறி வருகின்றனர், கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட தகராறில் பட்டப் பகலில் வீடு புகுந்து வாலிபரை சராமாரி வெட்டி படுகொலை செய்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Ramprasath H
First published:

Tags: Crime News, Death, Murder, Salem, Tamil News

அடுத்த செய்தி