முகப்பு /செய்தி /சேலம் / இரும்பு கம்பியால் ஹோட்டல் உரிமையாளரை அடித்துக்கொன்ற சமையல்காரர்... சேலத்தில் பரபரப்பு

இரும்பு கம்பியால் ஹோட்டல் உரிமையாளரை அடித்துக்கொன்ற சமையல்காரர்... சேலத்தில் பரபரப்பு

கொலையான கந்தசாமி

கொலையான கந்தசாமி

Salem News : சேலத்தில் தாபா ஹோட்டல் உரிமையாளரை சமையல்காரர் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Salem, India

சேலம் உடையாபட்டி பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி(60). இவரது மகன் சரவணன் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் குட்டக்காடு என்ற இடத்தில் நடத்தி வரும் பேக்கரியை கவனித்து வந்தார்.

இதற்கிடையில், பேக்கரி அருகே உள்ள தாபா ஹோட்டல் ஒன்றை கந்தசாமி லீசுக்கு எடுத்துள்ளார். விரைவில் திறக்கப்பட உள்ளதால் அதற்கான மராமத்து பணிகள் நடைபெற்று வந்தன. மேலும் தாபா ஹோட்டலுக்காக மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த ஜோசப்(30) என்பவரை சமையலராக வேலைக்கு சேர்த்துள்ளார். கந்தசாமி பகலில் பேக்கரி வேலையை கவனித்துக் கொண்டு, இரவில் தாபா ஹோட்டலில் படுத்து உறங்குவார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சமையலர் ஜோசப்புக்கும், கந்தசாமிக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஜோசப் இரும்பு கம்பியால் கந்தசாமியை தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த கந்தசாமி உயிரிழந்துள்ளார். பின்னர் ஜோசப் தலை மறைவு ஆகிவிட்டார்.

இதையும் படிங்க : கள்ளக்காதலுக்கு இடையூறு.. கூலிப்படையை ஏவி கணவனை தீர்த்துக்கட்ட மனைவி போட்ட ஸ்கெட்ச் - மதுரையில் பரபரப்பு

இதையடுத்து நேற்று காலை தந்தையை தேடி தாபா ஹோட்டலுக்கு அவரது மகன் சரவணன் வந்துள்ளார். அப்போது, கந்தசாமி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சரவணன் ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

top videos

    செய்தியாளர்  : கோகுல கண்ணன் - சேலம்

    First published:

    Tags: Crime News, Local News, Salem