சேலம் மெய்யனூர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி மணிகண்டன் (28). இவரும் அதே தெருவை சேர்ந்த இளம் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதுதொடர்பாக பெண் வீட்டார் மணிகண்டன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இருதரப்பிலும் சமரசம் ஏற்படாத நிலையில், இரு வீட்டருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்ததாக தெரிகிறது.
இதனிடையே மணிகண்டன் இளம் பெண்ணுக்கு மீண்டும் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது . இதுகுறித்து அந்த பெண்ணின் பெற்றோர், மணிகண்டன் மீது பள்ளப்பட்டி காவல் நிலையம் மற்றும் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையங்களில் புகார் தெரிவித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மணிகண்டன் வெளியூரில், கூலி வேலைக்கு சென்றதால் அவரது தாய் பழனியம்மாளை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். நாள் முழுக்க காவல் நிலையத்திலேயே தனது தாயினை வைத்து விசாரணை செய்ததால், மணிகண்டன் மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து, மணிகண்டன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Must Read : இந்துக்கள் கொண்டாடிய மொஹரம் பண்டிகை..! - மத நல்லிணக்கத்திற்கு உதாரணமான முதுவன் திடல் கிராமம்
இந்நிலையில், மணிகண்டனின் தற்கொலைக்கு பெண் விட்டாரின் பொய் புகார் மற்றும் காவல் துறையினர் அளித்த மன உளைச்சலே காரணம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த தற்கொலை விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் - திருமலை.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Love issue, Salem, Suicide, Youth dead