சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரசு தொடக்கப் பள்ளியில் படிக்கும் 5 ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் மீது சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கெங்கவல்லி அருகே மண்மலை பாலக்காடு அடுத்துள்ள சித்தன்பட்டி குட்டை கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை 50 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இங்கு ஒரு பெண் தலைமை ஆசிரியர் உள்பட இரண்டு ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கோடை விடுமுறை முடிந்த நிலையில், சமீபத்தில் பள்ளிக்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 22ஆம் தேதி மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற 5 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமி நான் இனி பள்ளிக்கு செல்லமாட்டேன் என, பெற்றோரிடம் அழுதவாறு கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், என்ன காரணம் என தனது மகளிடம் விசாரித்தபோது, செந்தாரப்பட்டியை சேர்ந்த அகஸ்டின் தங்கையா ( வயது 47) என்கிற பள்ளி ஆசிரியர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக கூறியுள்ளார்.
மேலும், தன்னுடன் படிக்கும் சக மாணவர்களை கை, கால்களை அழுத்த சொல்லி அவர்களிடமும் ஆசிரியர் அத்துமீறி நடந்து வருவதோடு நேற்றைய தினம் தன்னை பார்க்க பள்ளிக்கு வந்த உறவுக்கார 13 வயது சிறுமியிடமும் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் இதுகுறித்து பெற்றோரிடம் சொல்லக்கூடாது என மிரட்டியதாகவும் சிறுமி கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஊர்மக்களுடன் சென்று, நேற்று (23ஆம் தேதி) காலை பள்ளிக்கு வந்த ஆசிரியர் அகஸ்டின் தங்கையாவிடம் விசாரித்துள்ளனர். இதற்கு அவர் மழுப்பலாக பதில் கூறியதால் ஆத்திரமடைந்த ஊர்மக்கள் ஆசிரியரை சராமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த ஆசிரியர் அகஸ்டின் தங்கையா கூடமலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று கொண்டு வீடு திரும்பியுள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ஆசிரியரின் உறவினர்கள் சிறுமியின் பெற்றோரிடம் சமாதானம் பேசியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதனால் மனமுடைந்த பெற்றோர் தங்களுக்கு நியாயம் வேண்டும் என்றும், இனி வேறெந்த சிறுமிக்கும் இது போன்று பாதிப்பு ஏற்படக்கூடாது எனவும் ஆசிரியர் மீது கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில், கெங்கவல்லி போலீசார் ஆசிரியர் அகஸ்டின் தங்கையாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 5ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Salem, School student, School Teacher, Sexual harassment