தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வீட்டை பற்றி மட்டுமே சிந்திப்பதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். மேலும், ஆன்லைன் ரம்மி தடை குறித்து ஆளுநர் சந்தித்து முறையிட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த பதினொன்றரை ஆண்டு காலத்தில் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு பல்வேறு திட்ட பணிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வைத்த பெரும்பாலான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றி தந்து இருக்கிறோம் . கால்நடை மருத்துவமனைகள் போன்ற கட்டிடங்கள் கட்டித் தரப்பட்டுள்ளது . 16 வழிதடங்களில் புதிய பேருந்துகள் விடப்பட்டு உள்ளது. இதன் மூலம் மக்கள் தங்கு தடை இன்றி சென்றுவர முடிகிறது என்று பேசினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தமிழகம் போதை பொருள் நிறைந்த மாநிலமாக திகழ்ந்து வருகிறது. முதலமைச்சர் மானிய கோரிக்கை புத்தகத்தில் போதை பொருள் விற்போர் 2 ஆயிரத்து 138 கண்டுபிடித்து உள்ளோம் என தெரிவித்துள்ளார். ஆனால்148 பேரைத்தான் கைது செய்து உள்ளனர். மற்றவர்களை ஏன் கைது செய்யவில்லை.
இதையும் படிங்க: கோகுல்ராஜ் கொலை வழக்கு: கோர்ட்டில் வாயைத்திறக்காத சுவாதி.. சிசிடிவியைப் பார்த்து கோபமடைந்த நீதிபதிகள்!
ஆளும் திமுகவை சேர்ந்தவர்களே போதை பொருள் விற்பனையில் அதிக அளவில் ஈடுபட்டு உள்ளனர் .அதனால்தான் அவர்கள் மீது எந்த நடவடிக்கை எடுக்க முடியவில்லை. பள்ளி, கல்லூரி கஞ்சா விற்பனை செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது.
தமிழக மக்களுக்கு வயிறு எரிகிறது. கொலை கொள்ளை அன்றாட நிகழ்வாக தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.எதிர்க்கட்சிகள் குறை சொல்வதாக முதல்வர் பேசி வருகிறார், ஊடகங்களில் வருவதை பார்த்து தான் நாங்கள் சொல்கிறோம்.எதிர்க்கட்சித் தலைவராக இருந்து தமிழகத்தின் நடைபெறும் பிரச்சனைகள் குறித்து தெரிவித்து வருகிறோம். இதை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது முதல்வரின் கடமை. ஆனால் முதல்வர் தனது கடமையை தவிர்த்து வருகிறார்.
வீட்டைப் பற்றி மட்டுமே சிந்திக்கக்கூடிய முதலமைச்சர் ஸ்டாலின்.
தமிழகத்தில் பெரும்பாலான மருத்துவமனையில் போதிய மருந்து இருப்பு இல்லை, இது பற்றி அறிக்கை மூலமாக தெரிவித்தோம். எங்கு மருந்து தட்டுப்பாடு உள்ளது,அங்கு அனுப்புங்கள் என்று நடவடிக்கை எடுத்திருந்தால் சிறப்பான முதலமைச்சராக திகழ்ந்து இருப்பார்.
தனது மகன் நடித்த கலகத் தலைவன் படத்தை பற்றி பேசி வருகிறார். இதனால் மக்களுக்கு வயிறு எரிச்சல் தான் ஏற்பட்டு வருகிறது.
தனது மகனின் திரைப்படம் எப்படி ஓடுகிறது என்பது பற்றி தான் கேட்டு தெரிந்து கொள்கிறார். ஆனால் மக்கள் பிரச்சினை பற்றி கேட்கவில்லை என்பதால் மக்கள் வேதனையில் உள்ளனர். திறமையற்ற அரசு, பொம்மை முதலமைச்சர் இருப்பதால் விலைவாசி உயர்ந்து வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.
தமிழகம் தொழிற்சாலைகள் அதிக உள்ள மாநிலம் என்று முதலமைச்சர் கூறுகிறார் .இது அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. திமுக ஆட்சியில் எதுவும் கொண்டு வரவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுக திறந்து வைத்து வருகிறார்கள்.
அதிமுக ஆட்சியில் இருக்கும் போது ஆன்லைன் ரம்மியை ரத்து செய்ய வேண்டும் என்று ஏற்கனவே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக நீதிமன்றத்திற்கு சென்று ஆன்லைன் சூதாட்ட நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது.
ஆன்லைன் ரம்மி தடை குறித்து ஆளுநரை சந்தித்து நாங்களும் முறையிட்டு உள்ளோம்’ என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Edappadi Palanisami, EPS, MK Stalin