Home /News /salem /

அமைதி பேச்சுவார்த்தைக்கு வந்த திமுக -அதிமுகவினர் மோதல்.. ஆத்தூரில் பரபரப்பு

அமைதி பேச்சுவார்த்தைக்கு வந்த திமுக -அதிமுகவினர் மோதல்.. ஆத்தூரில் பரபரப்பு

திமுக-அதிமுக வினரிடையே மோதல்

திமுக-அதிமுக வினரிடையே மோதல்

Salem district News : ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோவில் திருவிழா நடத்துவது குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது திமுக மற்றும் அதிமுக வினரிடையே திடீர் மோதல் ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள செல்லியம்பாளையம் பகுதியில் பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா நடத்துவது குறித்து ஒரே சமூகத்தை சேர்ந்த இரு தரப்பினரிடையே பிரச்னை வந்துள்ளது.  இதுதொடர்பாக ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் மாணிக்கம் முன்னிலையில் திருவிழா நடத்துவது குறித்து அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் அ.தி.மு.க, மற்றும் தி.மு.க-வை சேர்ந்த இருதரப்பினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருதரப்பையும் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் திரண்டனர்.  அங்கு இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஒருவரையொருவர் தாக்கி கொண்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தகவலறிந்து உடனே சம்பவ இடத்திற்கு வந்த ஆத்தூர் நகர போலீசார், தாக்கி கொண்ட இருதரப்பினரையும் சமாதானம் செய்ய முயற்சித்தும் போலீசார் முன்னிலையில் மீண்டும் தாக்கி கொண்டதால் வட்டாட்சியர் வளாகம் போர்க்களமானது.

Must Read : திருவண்ணாமலை : கஞ்சா போதையில் கிரிவலப் பாதையில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த லாரி ஓட்டுனரால் பரபரப்பு

பின்னர், அங்கு திரண்டிருந்த மக்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனையடுத்து தாலூகா அலுவலக பணிக்கு வந்த மக்கள் நிம்மதியடைந்தனர், இதனால் தாலூகா அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
Published by:Suresh V
First published:

Tags: ADMK, Clash, DMK, Salem, Temple

அடுத்த செய்தி