ஹோம் /நியூஸ் /சேலம் /

யாருக்கு முதல் மரியாதை..! இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் திமுக - அதிமுவினர் வாக்குவாதம் - பள்ளி மாணவர்கள் காத்திருந்த அவலம்

யாருக்கு முதல் மரியாதை..! இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் திமுக - அதிமுவினர் வாக்குவாதம் - பள்ளி மாணவர்கள் காத்திருந்த அவலம்

பள்ளியில் மிதிவண்டி வழங்குவதில் திமுக அதிமுக இடையே மோதல்

பள்ளியில் மிதிவண்டி வழங்குவதில் திமுக அதிமுக இடையே மோதல்

Salem | யாருக்கு முன்னுரிமை என்ற திமுக - அதிமுக  வாக்குவாதம் காரணமாக பள்ளி மாணவர்கள் அவதிக்குள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Salem, India

சேலம் மாவட்டம் ஏற்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் அறிவுறுத்தலின் படி பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா நேற்று பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவிற்கு தலைமை தாங்க ஏற்காடு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சித்ரா, ஏற்காடு ஊராட்சி மற்ற தலைவர் சிவசக்தி  மற்றும் திமுக-வை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் புஸ்பராணி மற்றும் திமுக கவுன்சிலர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இலவச சைக்கிளுக்காக 43 மாணவ மாணவிகள் காத்திருந்தனர்.

இந்த நிலையில் திமுக மற்றும் அதிமுக இரு தரப்பினரும் விழாவிற்கு வந்ததால் யாருக்கு முன்னுரிமை கொடுப்பது,  யார் சைக்கிள் வழங்குவது என வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் மேடையில் சிறப்பு விருந்தினர்களை வரவேற்ற பள்ளி ஆசிரியர் ஒருவர் சட்டமன்ற உறுப்பினர் பெயரை குறிப்பிடாமல், முன்னதாக மாவட்ட கவுன்சிலர் பெயரை கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக சைக்கிள் வழங்கப்படாமல் மாணவ மாணவிகள் வெகு நேரம் வெயிலில் காத்திருந்தனர். ‌

இதை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் தரப்பினர்  சட்டமன்ற உறுப்பினரை அவமானப்படுத்தும் வகையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறி பள்ளி தலைமை ஆசிரியை மாலதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த திமுக வினர் அதிமுகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் பள்ளி தலைமை ஆசிரியரை அழைத்து பள்ளி குழந்தைகளை வெகு நேரம் காக்க வைக்க வேண்டாம் என்று கூறி உடனடியாக அங்கு காத்திருந்த மாணவர்களை அழைத்து சைக்கிளை கொடுத்து விட்டு அங்கிருந்து அதிமுக தரப்பினர் கலைந்து சென்று விட்டார்.

Also see... தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்

இதனைத் தொடர்ந்து திமுக கவுன்சிலர்கள் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம், தாங்கள் இல்லாமலேயே விழாவை நடத்தி இருக்கலாம் எனவும். தங்களுக்கு அழைப்பு விடுத்து அவமானப்படுத்தியதாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி வளாகத்தில் சலசலப்பு ஏற்பட்டது. யாருக்கு முன்னுரிமை என்ற திமுக - அதிமுக  வாக்குவாதம் காரணமாக பள்ளி மாணவர்கள் அவதிக்குள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: ADMK, DMK, Salem, Yercaud Constituency