முகப்பு /செய்தி /சேலம் / வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்...!

வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்...!

மனு வாங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மனு வாங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Salem, India

கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று ஆட்சியர், துறை சார்ந்த் அதிகாரிகளிடம், அரசின் திட்டப் பணிகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து வருகிறார். முதற்கட்டமாக, கடந்த 2 ஆம் தேதி வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஆய்வு செய்தார்.

அதன் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்டமாக சேலம் மாவட்டத்தில் இரண்டு நாட்களாக முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதற்காக சேலம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலாவதாக ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

' isDesktop="true" id="892305" youtubeid="CM2PAsL7H_c" category="salem">

வட்டாட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் விவரங்களை கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்த முதலமைச்சர், கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.

First published:

Tags: CM MK Stalin, Salem, TN Govt