முகப்பு /செய்தி /சேலம் / உதயநிதி ஸ்டாலின் கான்வாயின் குறுக்கே திடீரென புகுந்த சரக்கு ஆட்டோ... சேலம் அருகே பரபரப்பு!

உதயநிதி ஸ்டாலின் கான்வாயின் குறுக்கே திடீரென புகுந்த சரக்கு ஆட்டோ... சேலம் அருகே பரபரப்பு!

உதயநிதி காருக்கு இடையே புகுந்த சரக்கு ஆட்டோ

உதயநிதி காருக்கு இடையே புகுந்த சரக்கு ஆட்டோ

Udhayanidhi Stalin : சேலத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்ற கான்வாயின் குறுக்கே சரக்கு வாகனம் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Salem, India

சேலம் மாவட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு நேற்று மாலை (வெள்ளிக்கிழமை) மாலை எடப்பாடி வழியாக திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, சர்வீஸ் சாலையில் முன்பக்கம் பாதுகாப்பு கான்வாய் வாகனங்கள் சென்றுகொண்டிந்தது. அதன்படி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வாகனத்தை பின் தொடர்ந்து மற்ற அமைச்சர்களின் வாகனங்களும் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், கொண்டலாம்பட்டி அருகே அமைச்சர்களின் வாகனங்கள் சென்றபோது திடீரென போக்குவரத்து விதியை மீறி நீண்ட கம்பிகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்த அமைச்சர்களின் கான்வாய் வாகனங்களுக்குள் புகுந்தது.

இதனை சற்றும் எதிர்பாராத பாதுகாப்பு வாகன ஓட்டுனர்கள் கான்வாய்க்குள் வந்த ஆட்டோவில் மோதாமல் இருக்க தங்களது வாகனங்களை இடது புறமாக திருப்பினர். இதனால் அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த மண் திட்டின் மீது வாகனங்கள் மோதி நின்றது. இதனால் பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து திடீர் பிரேக் போட்டு நின்றது. வாகன ஓட்டுனர்களின் சாமர்த்தியத்தால் மற்ற வாகனங்களில் மோதாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து உடனடியாக அந்த சரக்கு வாகனம் ஓரங்கட்டப்பட்ட நிலையில் அமைச்சர் உதயநிதியின் கான்வாய் தடையின்றி அங்கிருந்து வேகமாக புறப்பட்டுச் சென்றது. பின்னர் கான்வாய்க்குள் கம்பியுடன் புகுந்த சரக்கு வாகன ஓட்டுனரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் காயமோ, வாகனங்களுக்கு சேதமோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: CM MK Stalin, DMK, Salem, Tamilnadu, Udhayanidhi Stalin