ஹோம் /நியூஸ் /சேலம் /

மாமனுக்கு தெரியாமல் 615 கிலோ வெள்ளிக்கட்டிகளை திருடிய மைத்துனர்

மாமனுக்கு தெரியாமல் 615 கிலோ வெள்ளிக்கட்டிகளை திருடிய மைத்துனர்

615 வெள்ளிக்கட்டிகள் திருட்டு

615 வெள்ளிக்கட்டிகள் திருட்டு

Salem District News | இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பன்னீர்செல்வம் தனது பங்கை பிரித்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Salem, India

  சேலத்தில் அலுவலகத்தில் வைத்திருந்த 615 கிலோ வெள்ளிக்கட்டிகளை மாமனுக்கு தெரியாமல்  மைத்துனர் எடுத்துச் சென்றது  தொடர்பாக செவ்வாய்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் வெள்ளி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவியின் சகோதரர் சத்யநாராயணன் என்பவருடன் இணைந்து வெள்ளி தொழிலை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வந்துள்ளார்.

  இதற்கிடையில், இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பன்னீர்செல்வம் தனது பங்கை பிரித்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்து அதன் தொடர்பான விசாரணை கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்துள்ளது.

  இதையும் படிங்க : கிருஷ்ணகிரியில் முகாமிட்டுள்ள 3 காட்டு யானைகள்... பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்..

  இந்நிலையில், இன்று வெள்ளித்தொழில் செய்து வந்த அலுவலகத்தை திறந்து யாரும் இல்லாத நேரத்தில் 615 கிலோ வெள்ளிக்கட்டிகள், 2 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்களை சத்யநாராயணன் எடுத்து சென்றுவிட்டதாக பாதிக்கப்பட்ட பன்னீர்செல்வம் சேலம் செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

  இந்த புகாரின்பெயரில் அலுவலகத்திற்கு சென்ற காவல்துறையினர் தடவியல் நிபுணர்களை கொண்டு கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சத்யநாராயணனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

  செய்தியாளர் : திருமலை தமிழ்மணி - சேலம்

  Published by:Karthi K
  First published:

  Tags: Crime News, Salem