முகப்பு /செய்தி /Salem / நள்ளிரவில் விதவை கோலத்தில் பொங்கல் வைத்த சுமங்கலி பெண்கள்.. சேலத்தில் வினோத வழிபாடு

நள்ளிரவில் விதவை கோலத்தில் பொங்கல் வைத்த சுமங்கலி பெண்கள்.. சேலத்தில் வினோத வழிபாடு

சுமங்கலி பெண்கள் விதவை கோலத்தில் வழிபாடு

சுமங்கலி பெண்கள் விதவை கோலத்தில் வழிபாடு

Salem : சேலம் மாவட்டம் நத்தக்கரை கிராமத்தில் நள்ளிரவில் சுமங்கலி பெண்கள் வெள்ளை நிற ஆடை அணிந்தபடி, விதவை கோலத்தில் பொங்கல் வைத்து வினோத வழிபாடு செய்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சேலம்  மாவட்டம்  ஆத்தூர் அருகே நத்தக்கரை கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த நல்லசேவன் கோவில்  உள்ளது.  ஐந்தாண்டுகளுக்கு  ஒரு முறை  நடக்கும்  இக்கோவில் திருவிழா  கடந்த, 3ஆம்  தேதி  பூச்சாட்டுதலுடன் துவங்கியது.

ஏழு நாள்  நடக்கும்  இவ்விழாவை  சேலம் மாவட்டம்  நத்தக்கரை, பெரியேரி, நாமக்கல்  மாவட்டம், ஆயில்பட்டி, பெரம்பலுார்  மாவட்டம், வாலிகண்டபுரம், விழுப்புரம்  மாவட்டம், தென்பொன்பரப்பி, மட்டியக்குறிச்சி ஆகிய கிராம மக்கள் ஒன்று  சேர்ந்து  நடத்துவது  வழக்கம்.

இந்த விழாவில், திருமணமான  கிராம பெண்கள், நகை எதுவும்  அணியாமல், வெள்ளை  நிற ஆடை அணிந்து, விதவை கோலத்தில்  பொங்கல் வைத்து வினோதமான முறையில் வழிபாடு நடத்தும்  பழக்கத்தை பல ஆண்டுகளாக கடைபிடித்து  வருகின்றனர்.

இந்த பொங்கல்  விழாவில்,  திருமணமான புகுந்த வீட்டு பெண்களே  கலந்து கொள்ள வேண்டும் என்பது ஐதீகம். இந்த வித்தியாசமான  பொங்கல் விழா சூரிய உதயத்துக்கு முன்னர்  நடத்துவதையும்  கிராம மக்கள் பல ஆண்டுகளாக கடைபிடித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன்படி, நத்தக்கரை  கிராமத்தில்  நள்ளிரவு  12 மணிக்கு  பூஜை துவங்கியது. 500க்கும்  மேற்பட்ட  திருமணமான பெண்கள் பூஜை  பொருட்கள் அடங்கிய பொங்கல் கூடையுடன் கோவிலுக்கு  வந்தனர். பின் விதவை கோலத்தில் பொங்கல் வைத்து  வழிபாடு நடத்தினார்கள்.

Must Read : மனைவி குடும்பம் நடத்த வராத ஆத்திரம்.. மாமனாரை வெட்டி கொலை செய்த மருமகன்

அப்போது, போலீஸ்  சீருடையில்  வந்த  பூசாரி 200க்கும்  மேற்பட்ட  கிடா, சேவல், கோழிகளை பலி கொடுத்து, பூஜை  செய்து வழிபட்டனர்.

First published:

Tags: Salem, Temple