ஹோம் /நியூஸ் /சேலம் /

கடிதத்தை லவ் லட்டர் போல திருப்பி அனுப்ப மாட்டோம்: எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த புகழேந்தி

கடிதத்தை லவ் லட்டர் போல திருப்பி அனுப்ப மாட்டோம்: எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த புகழேந்தி

புகழேந்தி

புகழேந்தி

Bangalore puzhanthi Press Meet | மத்திய அரசையும் தேர்தல் ஆணையத்தையும் சட்ட ஆணையகத்தையும் நாங்கள் மதிக்கின்றோம் என புகழேந்தி பேச்சு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India

சட்ட ஆணையகத்தின் கடித்தையே திருப்பி அனுப்புகிற பண்பாடு மிக்க ஒரே தலைவர் தமிழகத்தில்  எடப்பாடி பழனிசாமிதான் ஓபிஎஸ் ஆதரவாளர் பெங்களூர் புகழேந்தி விமர்சித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, ஒரே நாடு ஒரு தேர்தல் என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களில் தேர்ட் ஒன் தேர்ட் மெஜாரிட்டி ஆதரவு இருந்தால் தான் நிறைவேற்ற முடியும் என்றும்

இதை பஞ்சாயத்து ராஜ் வரை தெரிந்து அறிந்து கொள்ள வேண்டும். அதற்காக ஒரு சட்ட அமைச்சகமும் செயல்படுகிறது.

இதெல்லாம் தெரிந்து அறிந்து போய் சேர்ப்பதற்குள் தமிழகத்தில் இன்னொரு தேர்தல் வந்துவிடும் என தெரிவித்தார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா இல்லையா என்பதை எல்லாம், இவர்கள் கண்டறிந்து மத்திய அரசுக்கு சொல்லி, அதற்கு பின்னால் தான் முடிவெடுக்க வேண்டும்.  அதில் எங்கள் கருத்தை சொல்வதற்கு ஓபிஎஸ் தயாராக இருக்கிறார். ஈ-மெயில் மூலம் நாங்கள் கடிதத்தை பெற்றுவிட்டோம் என கூறிய அவர், மத்திய அரசையும் தேர்தல் ஆணையத்தையும் சட்ட ஆணையகத்தையும் நாங்கள் மதிக்கின்றோம். அதில் கலந்துகொண்டு எங்கள் கருத்துகளை சொல்வோம் என பேசினார்.

தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை லவ் லட்டர் போல அதை திருப்பி அனுப்ப மாட்டோம் என்றும் தேர்தல் ஆணையத்தின், சட்ட ஆணையகத்தின் கடித்தையே திருப்பி அனுப்புகிற பண்பாடு மிக்க ஒரே தலைவர் தமிழகத்தில் பழனிசாமி தான் என விமர்சனம் செய்தார்.

அம்மா உணவகத்தை காப்பது முதலமைச்சரின் கடமை. ஓட்டு போடதவர்களுக்கும் நீங்கள்தான் முதலமைச்சர் என சொல்லியிருக்கிறீர்கள். அந்த நம்பிக்கையில் அம்மா உணவகத்திற்கு எதிராக இருக்கமாட்டீர்கள் என நம்புகிறோம் என்றும் தெரிவித்தார்.

First published:

Tags: ADMK, EPS, OPS