Home /News /salem /

பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியில் கவிழ்ந்த ஆட்டோ.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சிறுவர்கள்..

பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியில் கவிழ்ந்த ஆட்டோ.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சிறுவர்கள்..

பள்ளத்தில் கவிழ்ந்த ஆட்டோ

பள்ளத்தில் கவிழ்ந்த ஆட்டோ

அங்கு வாகனங்கள் செல்லாமல் இருக்க தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. அமீர்ஜான் இந்த தடுப்புகளை அகற்றிவிட்டு அந்த வழியாகச் சென்றுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India
பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழியில் தேங்கி இருந்த மழை நீரில் ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இதில் ஓட்டுநர் உள்ளிட்ட மூன்று பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

சேலம் மாவட்டம் தேவேந்திரபுரம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அப்பகுதியில் பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளது. சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக, இந்த பள்ளங்களில் மழை நீர் தேங்கி குளம்போல் காணப்படுகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை, சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அமீர்ஜான்(வயது 30) என்பவர் இரண்டு சிறுவர்களை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது தேவேந்திரபுரம் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறுவதால், அங்கு வாகனங்கள் செல்லாமல் இருக்க தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. அமீர்ஜான் இந்த தடுப்புகளை அகற்றிவிட்டு அந்த வழியாகச் சென்றுள்ளார். சிறிது தூரம் சென்ற ஆட்டோ அங்கு பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்டு மழை நீர் தேங்கி இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதையும் வாசிக்க: தனுஷ்கோடியில் புயலால் சேதமடைந்த தேவாலயம்.. சீரழிந்து வரும் வரலாற்று சின்னங்கள்..

இதனால் அதிர்ச்சடைந்த அமீர்ஜானும், இரண்டு சிறுவர்களும் மேலே ஏறி வந்து உயிர் தப்பினர். பின்னர் சிறிது நேரத்தில் ஆட்டோ தண்ணீரில் மூழ்கியது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு  ஆட்டோ ஓட்டுநர் அமீர்ஜான் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் கிரேன் ஒன்றை வரவைத்து பாதாள  சாக்கடைக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் மூழ்கிய ஆட்டோவை மேலே எடுக்க முயற்சி மேற்கொண்டனர்.  சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தண்ணீரில் மூழ்கி ஆட்டோ மீட்கப்பட்டது.
Published by:Ramprasath H
First published:

Tags: Accident, Auto Driver, Salem

அடுத்த செய்தி