Home /News /salem /

ஆத்தூரில் காய்கறி சந்தையில் கடை ஒதுக்க ஒப்பந்ததாரர்கள் அடாவடி வசூல்.. தட்டிக்கேட்ட விவசாயி மீது தாக்குதல்

ஆத்தூரில் காய்கறி சந்தையில் கடை ஒதுக்க ஒப்பந்ததாரர்கள் அடாவடி வசூல்.. தட்டிக்கேட்ட விவசாயி மீது தாக்குதல்

ஆத்தூரில் காய்கறி வாரச்சந்தை

ஆத்தூரில் காய்கறி வாரச்சந்தை

salem | ஆத்தூர் அருகே புதிதாக கட்டித் திறக்கப்பட்ட காய்கறி  வாரச்சந்தையில்  விவசாயிகளிடம்  2000 ரூபாய்  வரை  அடாவடியாக வசூல் செய்யப்படுகிறது. இதனை தட்டிக் கேட்டவர்களை ஓப்பந்ததாரர்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால் தனியார் கட்டண வசூல் ஒப்பந்ததை ரத்து செய்து பேரூராட்சி நிர்வாகம் மூலம் கட்டணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Salem, India
சேலம்  மாவட்டம்  ஆத்தூர் அருகே வீரகனூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி எதிரில், வாரம் தோறும் திங்கட்கிழமை காய்கறி  வாரச் சந்தையும், சனிக் கிழமையன்று  கால்நடை சந்தையும்  செயல்பட்டு வருகிறது. இந்த காய்கறி சந்தை மற்றும் கால்நடை சந்தைக்கு, ஆத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் காய்கறிகள் மற்றும் கால்நடைகளை வாங்கவும் விற்பனை செய்யவும் வருவது வழக்கம்.

இதனிடையே  வாரச்சந்தையில்  மேற்கூரை, மின் விளக்குகள்  உள்ளிட்ட அடிப்படை  வசதிகள் ஏதும் இல்லாததால் விவசாயிகள்  மற்றும் வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனால் வாரச்சந்தையை விரிவுப்படுத்தி அடிப்படை  வசதிகளை  செய்து  தர  வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை அடுத்து வாரச்சந்தை மேற்கூரையுடன் மின் விளக்குகள் அமைத்து, பாதுகாப்பான சுற்றுச்சுவருடன் புதிய கட்டிடம்  கட்டுவதற்காக கடந்த  2019 ஆம் ஆண்டு ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர்  விடப்பட்டு  பணிகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் கட்டுமான  பணிகள் முழுமையாக முடிவடைந்து நேற்று  முன்னறிவிப்பு இன்றி 200 க்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்பட்டது. இதனால் வாரச் சந்தையில் கடை போட  விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அதிக அளவில் குவிந்தனர்.

இதையறிந்த வாரச்சந்தை ஒப்பந்ததாரர்கள் வாரச்சந்தை கேட்டை மூடிவிட்டு அரசு  நிர்ணயித்த தொகையை  விட கூடுதலாக,  தலா  கடை  ஒன்றுக்கு  அடாவடியாக  2000 ரூபாய்  வீதம் வசூலித்த பின்பே கடைக்கு அனுமதி தந்துள்ளனர்.

இதனை  தட்டிக் கேட்ட  விவசாயி  மாதேஸ்வரன் என்பவரை போலீசார் முன்னிலையிலேயே சராமாரியாக தாக்கி சட்டையை  கிழத்து துரத்தியதாக கூறப்படுகின்றது. எனவே  திமுக வைச் சார்ந்த  ஒப்பந்ததாரர்களின் அராஜக போக்கை கண்டித்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் போராட்டம்  நடத்தப் போவதாக தெரிவித்துள்ளனர்.

Also see...பிரபல தோல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் ஐடி ரெய்டு - சென்னை, வேலூரில் 60 இடங்களில் அதிரடி சோதனை

எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தனியார் கட்டண வசூல் ஒப்பந்ததை ரத்து செய்து பேரூராட்சி நிர்வாகம் மூலம் சுங்க கட்டணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
Published by:Vaijayanthi S
First published:

Tags: Farmer, Salem

அடுத்த செய்தி