ஹோம் /நியூஸ் /சேலம் /

ரூ.12 கோடி மதிப்பிலான சொத்தை அபகரிக்க முயற்சி... ரவுடியை காரில் கடத்திய நகைக்கடை உரிமையாளர்...

ரூ.12 கோடி மதிப்பிலான சொத்தை அபகரிக்க முயற்சி... ரவுடியை காரில் கடத்திய நகைக்கடை உரிமையாளர்...

பாபு, பூபதி

பாபு, பூபதி

salem | ரூ.12 கோடி மதிப்பிலான சொத்தை அபகரிக்க முயன்ற ரவுடியை நகைக்கடை உரிமையாளர் ஒருவர் காரில் கடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Salem, India

  சேலம் கோரிமேடு பிருந்தாவன் கார்டனை சேர்ந்தவர் 36 வயதான பூபதி. இவர் மீது ஆட்கடத்தல், கொள்ளை, அடிதடி என பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. செவ்வாய்கிழமை இரவு நண்பர் பிரவீன்குமார் என்பவருடன் கடை வாசலில் நின்று பேசிக்கொண்டிருந்தார்.

  அப்போது கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் இருவரையும் சரமாரியாக தாக்கி அவர்களை காரில் கடத்தி சென்றுள்ளது. போகும் வழியில் காரில் இருந்து குதித்து பிரவீன்குமார் மட்டும் தப்பித்து கடத்தல் தொடர்பாக போலீசாருக்கு புகார் கொடுத்துள்ளார்.

  சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அழகாபுரம் போலீசார் இரவோடு இரவாக தனிப்படை அமைத்து கடத்தல் கும்பலை தேடிவந்தனர். மேலும் செல்போன் ஆதாரங்களின் அடிப்படையில் திருவண்ணாமலையில் வைத்து கடத்தல் கும்பலை போலீசார் சுற்றிவளைத்தனர்.

  போலீசார் வருவதை அறிந்த கடத்தல் கும்பல் பூபதியை காரில் விட்டு தப்பியோடியது. பூபதியை மீட்டு சேலம் அழைத்து வந்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது.

  இதையும் படிங்க : காதலனை விஷ ஜூஸ் கொடுத்து கொன்றுவிட்டு தப்பிக்க கூகுளில் ஐடியா தேடிய இளம்பெண்.. தமிழக போலீஸ் வசம் விசாரணை

  புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அகிலேஷ் செல்வ மாளிகை நகைக்கடை உரிமையாளர் ஏகாம்பரம் என்பவர் தான் தன்னை கடத்தியதாக பூபதி வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஏகாம்பரத்தின் 12 கோடி மதிப்பிலான நிலத்தை விற்பனை செய்து தருவதாக கூறி நிலத்தின் பத்திரங்களை பூபதி சில மாதங்களுக்கு முன்பு வாங்கியுள்ளார்.

  நிலத்தை விற்று தராமல் இருந்ததால் சந்தேகமடைந்த ஏகாம்பரம் பத்திரத்தை தருமாறு கேட்டுள்ளார். ஆனால் பூபதி பத்திரத்தை தர மறுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஏகாம்பரம் கூலிப்படையை வைத்து பூபதியை கடத்தி சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

  பூபதியை கடத்திய கூலிப்படையினர் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த கூலிப்படையை போலீசார் தேடி வருகின்றனர். நகைக்கடை உரிமையாளர் ஏகாம்பரம், கடை மேலாளர் பாபு ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அதேபோல், நகை கடை உரிமையாளர் கொடுத்த புகாரின்பேரில், பூபதியையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  Published by:Karthi K
  First published:

  Tags: Crime News, Salem