சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஆணையம்பட்டி கிராமத்தில் பழமையான ஸ்ரீ சக்தி பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் ஸ்ரீ சக்தி பெரிய மாரியம்மன் கோவில் ஆடித்தேரோட்டம் மற்றும் ஸ்ரீ ஐய்யனார், ஸ்ரீ நடசெல்லியம்மன் சுவாமிகளுக்கு ஊரணி பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம்.
இதனையடுத்து இரண்டாண்டு கொரோனா ஊரடங்கிற்கு பின்பு இந்த ஆண்டு கடந்த 4 ம் தேதி காப்புக் கட்டுதலுடன் கோவில் திருவிழா துவங்கியது. அதை தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தும் மாவிளக்கு, ஊரணி பொங்கல் வைத்தும், பால்குடம் எடுத்தும் தீச்சட்டி ஏந்தியும், நாக்கலகு, விமான அலகுகள் குத்திக்கொண்டு பக்தர்கள் நேர்த்திக்க்டன் செலுத்தி வந்தார்கள்.
இதனையடுத்து திருவிழாவின் 5ம் நாளான இன்று ஆடித்தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்றது. 80 அடி உயரமுள்ள திருத்தேரில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியபடி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அலங்கரிக்கப்பட்ட திருத்தேரை கேரள செண்டை மேளம் முழங்க தேரோடும் வீதிகள் வழியாக ஆண்கள் மற்றும் பெண்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
Also see... மயிலாடுதுறை ஸ்ரீ அக்னீஸ்வரர் கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தப்படும்
இன்று நடைபெற்ற ஆடித் தேரோட்டத்தில் ஆணையம்பட்டி அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aadi, Car Festival, Salem