Home /News /salem /

நம்மாழ்வாரை பின்பற்றி பாஜக செயல்படும் - சேலத்தில் அண்ணாமலை பேச்சு

நம்மாழ்வாரை பின்பற்றி பாஜக செயல்படும் - சேலத்தில் அண்ணாமலை பேச்சு

அண்ணாமலை

அண்ணாமலை

Annamalai : மக்களை ஏமாற்றி மக்களுடன் இருப்பதாக புகைப்படங்களை எடுத்து விளம்பரப்படுத்தி வாக்கு வாங்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை என்று சேலத்தில் நடைபெற்ற விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டில் அண்ணாமலை பேசினார்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Salem, India
    சேலம் மூன்று ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு கடந்த 5ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

    எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மாநாட்டை துவக்கி வைத்த நிலையில், 3வது நாள் நிறைவு மாநாட்டில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மாநிலத் துணைத் தலைவர் கேபி இராமலிங்கம் விவசாயிகள் அணி மாநில தலைவர் நாகராஜ் பொதுச்செயலாளர் கவிதா, கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

    மாநாட்டில், 75வது சுதந்திர தின அமிர்த திருவிழாவையொட்டி ஆகஸ்ட் 13, 14, 15 ஆகிய மூன்று தினங்களுக்கு வீடுகளில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஸ்டிக்கரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  விவசாயிகளுக்கு வழங்கினார்.

    பின்னர், மாநாட்டில் அண்ணாமலை பேசுகையில்,  விவசாயம் செய்து பிழைக்க முடியாது என்று கருதிக் கொண்டிருந்த நேரத்தில் கடந்த 8 ஆண்டுகளில் விவசாயம் செய்து பிழைக்க முடியும் என்ற நம்பிக்கை ஊட்டியவர் பிரதமர் மோடி.

    இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் சொட்டு நீர் பாசனம், லோன் மூலம் மருந்து தெளித்தல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. என்று கூறிய அவர், கடந்த 70 ஆண்டு காலமாக அரசியல் நோக்கத்தினால் தேர்தல் வரும் போது விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு வந்ததாக குற்றம் சாட்டினார்.

    பாலை கொம்பில் இருந்து கறக்க வேண்டுமா? காம்பில் இருந்து கறக்க வேண்டுமா? என்று தெரியாமல் தமிழக விவசாயிகள் விவசாய சட்டத்தை எதிர்த்து வருகிறார்கள். விவசாயிகளுக்கு என கிசான் கிரெடிட் கார்டு திட்டம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது.

    அதன் மூலம் கடன் பெறும் விவசாயிகளுக்கு வருடத்திற்கு மூன்று சதவீத வட்டி விகிதம் மட்டுமே விதிக்கப்படும். கிசான் கிரெடிட் கார்டு மூலம் இதுவரை 83 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்று கூறினார்.

    மக்களை ஏமாற்றி மக்களுடன் இருப்பதாக புகைப்படங்களை  எடுத்து விளம்பரப்படுத்தி வாக்கு  வாங்க வேண்டிய அவசியம் பாஜகவிற்கு இல்லை என்று கூறிய அண்ணாமலை,  விவசாயிகளுக்கு தோள் கொடுப்பதாக வெறும் பேச்சை மட்டும் பேசி கிழிப்பதாக திமுக அரசை விமர்சனம் செய்தார்.

    அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு 15 மாதமாக ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிற்கு குழாய் அமைக்க முடியாமல் திணறி வருவது வெட்கக்கேடாக உள்ளது. இந்த விடியா அரசு பாஜகவை பற்றி விமர்சனம் செய்ய எந்த தகுதியும் இல்லை என்றார்.  கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியாவில் எந்த விவசாயியும் பட்டினியால்  இறக்கவில்லை. விவசாய உள்கட்டமைப்பு நிதிக்கு ஒரு லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து அதன் மூலம் மாவட்டத்திற்கு ஒரு கிடங்கு, வேளாண் பொருட்களை வைப்பதற்கு இடம், ரயில்வே மூலம் விவசாய பொருட்களை எடுத்துச் செல்ல தனி பெட்டி என பல திட்டங்களை மத்திய அரசு உருவாக்கிக் கொடுத்துள்ளது என்று கூறினார்.

    தொடர்ந்து பேசிய அண்ணாமலை,  ஈரானில் இருந்து பெருங்காயம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால் பிரதமர் மோடி பொறுப்பேற்ற பிறகு, இந்தியாவிலேயே பெருங்காய உற்பத்தி நடைபெற்று தற்போது தன்னிறைவு பெற்றுள்ளது என்றார். சிக்கிம் மாநிலத்தை போன்று அடுத்த ஐந்து ஆண்டுகளில் இயற்கை இடுபொருட்களை பயன்படுத்தி நூறு விழுக்காடு விவசாயம்  நடைபெற உள்ளது. இயற்கை விவசாயத்தில் நம்மாழ்வாரை பின்பற்றி பாஜக செயல்படும்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆனால், தமிழகத்தில் ரசாயன பொருட்களை பயன்படுத்தி மட்டுமே விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விவசாயத்திற்கு மாற்றாக இயற்கை வேளாண் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்த தயங்குவதாக தெரிவித்த அவர், எதிர்வரும் காலத்தில் நம்மாழ்வாரை பின்பற்றி பாஜக செயல்படும் என்றார்.

    Must Read : போதைக்காக ஆன்லைனில் மாத்திரைகளை வாங்கி பயன்படுத்திய இளைஞர்கள்... ஈரோட்டில் கைது

    இந்த விவசாய மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்களை ஆலோசித்து மத்திய அரசிற்கு பரிந்துரை செய்யப்படும் என்றும், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் என்ற கோட்பாடுகளை கொண்ட ராம ராஜ்ஜியம் மோடி தலைமையில் உருவாக தான் போகிறது அது விவசாயத்தை வைத்துதான் நடக்கும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

    செய்தியாளர் - திருமலை.
    Published by:Suresh V
    First published:

    Tags: Annamalai, BJP, Farmers, Salem

    அடுத்த செய்தி