Home /News /salem /

தமிழகம் மின்மிகை மாநிலமாக இருந்தால் எதற்கு கட்டணத்தை உயர்த்த வேண்டும்? - அண்ணாமலை கேள்வி

தமிழகம் மின்மிகை மாநிலமாக இருந்தால் எதற்கு கட்டணத்தை உயர்த்த வேண்டும்? - அண்ணாமலை கேள்வி

அண்ணாமலை

அண்ணாமலை

Annamalai : தமிழகத்தில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வருகின்ற 23 ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வருகின்ற 23 ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தபடும் என சேலத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ்  உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, அண்ணாமலை கூறுகையில், மின் கட்டண உயர்வுக்கு மின்துறை அமைச்சர் சாக்கு, போக்கு கூறுகிறார். மத்திய அரசின் நிர்பந்தம் என்று கூறுகிறார். திமுக தேர்தல் அறிக்கையில் மாதாமாதம் கணக்கிடப்படும் முறை அமல்படுத்தப்படும் என்றும்  வருடத்திற்கு 6000 ரூபாய் சேமிக்கப்படும் என்றனர். இதன்மூலம் மாதம் 500 ரூபாய் குறையவேண்டும். ஆனால் சொத்துவரி, மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.

மத்திய அரசு RDSS திட்டம் மூலம் 3,03,000 கோடி ஒதுக்கி உள்ளது. இதில் 35,981 கோடி ரூபாய் டான் ஜெட்கோவிற்கு ஒருமுறை மானியம் தருவதற்கு, மின் கட்டணத்தை உயர்த்தவேண்டும் என்று எங்கும் கூறவில்லை. மாறாக நட்டத்தை குறைக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள், சீர்திருத்த பணிகள், கட்டண விவரம், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தினால் 19,235 கோடி மானியம் தரப்படும், மின் இழப்பை தடுக்க நடவடிக்கை எடுத்தால் 16,746 கோடி ரூபாய் மானியம் தரப்படும் என்றுதான் கூறப்பட்டுள்ளது.

எப்ரல் 1 முதல் நேற்று வரை தமிழகத்தில் 26,681 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து தரப்பட்டுள்ளது. அதில் தமிழக அரசின் சொந்த உற்பத்தி 8,215 மில்லியன் யூனிட், தனியாரிடம் கொள்முதல் செய்தது 2,560 மில்லியன் யூனிட், மத்திய அரசு நிறுவனத்திடம் இருந்து வாங்கியது 15,905 மில்லியன் யூனிட். அந்தவகையில் 60 சதவீதம் வெளியில் இருந்து வாங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தி, சில நிறுவனங்களை பாதுகாக்க அதிகவிலைக்கு வெளியில் வாங்குகின்றனர். இதனால் ஒரு யூனிட்டிற்கு 1.90 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது என்று அண்ணாமலை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தியா முழுவதும் உள்ள அனல்மின் நிலையங்களில் 80 சதவீத உற்பத்தி திறன் கொண்டதாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் 65 சதவீத உற்பத்தி திறன். பிஜிஆர் நிறுவனம் மூலம் ஏற்படுத்தி கொடுத்த மேட்டூர் அனல்மின் நிலையம் 60 சதவீதம் உற்பத்தி திறன் கொண்டதாக உள்ளது.

தமிழகத்தில் வீடுகளுக்கு மேல் 1 கிலோ வாட் சோலார் மின் அமைப்பு ஏற்படுத்த 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும். தனியார் தொழிற்துறைக்கு 1 மெகாவாட் சோலார் அமைப்பு ஏற்படுத்த 20 லட்சம் ரூபாய் கொடுக்காமல் அனுமதி வாங்கமுடியாது.
இந்தியாவிலேயே அதிக கடன் சுமை உள்ள நிறுவனமாக டான்ஜெட்கோ உள்ளது.

அண்ணாமலை


நஷ்டத்தை குறைக்க வேண்டும் என்றால் தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்வதை குறைக்க வேண்டும். இதுதொடர்பாக தணிக்கை நடக்கும்போது தொடர்புடையவர்கள் சிறைக்கு செல்வீர்கள். அரசின் அனல்மின் உற்பத்தி திறன் குறைவதற்கான காரணம் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். லஞ்சம் இல்லாமல் ஒற்றை சாளரமுறையில் சோலார் அமைப்பிற்கு ஒரே நாளில் அனுமதி தரப்படும் என்று முதல்வர் அறிவிக்கவேண்டும். 48 மணிநேரத்தில் தனியார் சோலார் உற்பத்தி நிறுவனத்திற்கு அனுமதி தரவேண்டும்.

மின்மிகை மாநிலமாக இருந்தால் எதற்கு கட்டணம் உயர்த்த வேண்டும் என்று கேள்வி எழுப்பிய அண்ணாமலை,  பிஜிஆர் நிறுவனம் மேட்டூர் அணல்மின் நிலையம் அமைப்பதில் தோல்வி அடைந்த நிலையில், எண்ணூர் ஆலை அமைக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனை ரத்து செய்யவேண்டும்.

தமிழகத்தில் 1,80,748 மின்மாற்றிகள் உள்ளன. இதில் 10 சதவீதம்தான் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. முதலில் அனைத்து நிறுவனங்களுக்கும் ஸ்மார்ட் மீட்டர் மாற்றவேண்டும்.
விவசாயத்திற்கு இலவச மின் இணைப்புக்கு வழங்குவதாக கூறுகின்றனர். அதில் ஏகப்பட்ட மின் இழப்பு ஏற்படுகிறது.
தமிழகத்தில்தான் மின்சாரம் குறைந்த கட்டணத்தில் தருவதாக கூறுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குஜராத்தில் 24 மணிநேரத்திற்கும் விவசாயத்திற்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. அங்கு டாஸ்மாக் வருமானம் இல்லை.
கொள்ளை அடிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட நிறுவனம் தான் டான்ஜெட்கோ. இதனை திவாலாக செய்துவிட்டு அதன் சுமையை மக்கள் மீது சுமத்துவது எந்தவிதத்தில் நியாயம் என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், மத்திய அரசின் மானியம் வேண்டாம் என்று சொல்லமுடியுமா என்று கேள்வி எழுப்பிய அண்ணாமலை, 23 ஆம் தேதி காலை 11.30 மணிக்கு மின் கட்டண உயர்வை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்தப்படும். அதன்பிறகும் கட்டணம் குறைக்கவில்லை என்றால் மின்சார அலுவலகம் முற்றுகையிடப்படும் என்று அறிவித்தார்.

Must Read : தமிழ்நாடு U-19 கிரிக்கெட் அணியின் கேப்டனாக கோவை காருண்யா பல்கலைக்கழக மாணவர் தேர்வு

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, கள்ளக்குறிச்சி சம்பவத்தில் எஸ்.பி., கலெக்டர் சிறப்பாக பணியாற்றியுள்ளதாக அமைச்சர் கூறினார். அப்படி உள்ள நிலையில் எதற்கு கலெக்டர் மற்றும் எஸ்.பி. மாற்றப்பட்டார். காலை செய்தியாளர் சந்திப்பில் பள்ளி மீது எந்த தவறும் இல்லை என்று கூறிய டிஜிபி, மாலை பள்ளி நிர்வாகத்தினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கிறார். தனியார் பள்ளிக்கு பாதுகாப்பும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நியாயம் பெற்றுதரவேண்டும். அப்போதுதான் காவல்துறை மீது நம்பிக்கை ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
Published by:Suresh V
First published:

Tags: Annamalai, BJP, Electricity, Salem

அடுத்த செய்தி