ஹோம் /நியூஸ் /சேலம் /

இறந்தவரின் உடலுடன் இரவு முழுவதும் கேட்பாரற்றுக் கிடந்த ஆம்புலன்சால் சேலத்தில் பரபரப்பு...

இறந்தவரின் உடலுடன் இரவு முழுவதும் கேட்பாரற்றுக் கிடந்த ஆம்புலன்சால் சேலத்தில் பரபரப்பு...

Salem | சேலத்தில் 14 மணி நேரமாக  சாலையோரம் உயிரிழந்த ஒரு முதியோரின் உடல் ஆம்புலன்ஸில் வைத்து விட்டு  சென்றதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Salem, India

  சேலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த ராமு(72) என்ற முதியவர் உடையாபட்டி பகுதியில் உள்ள அவரது சகோதரர் வீட்டில் தங்கி இருந்து கடந்த சில நாட்களாக சர்க்கரை நோய் பாதிப்பிற்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார்.  நேற்று அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று கொண்டிருந்தபோது, அன்னதானப்பட்டி காந்திசிலை அருகே மயங்கி சாலையில் விழுந்து உயிரிழந்தார்.

  இந்த நிலையில் அன்னதானப்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து உடலை தனியார் ஆம்புலன்சில் ஏற்றி சாலையின் அருகே நிறுத்திவிட்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக இறந்த முதியவரின் உறவினர்களுக்கு நேற்று நள்ளிரவு தகவல் கிடைத்துள்ளது.

  அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சேலம் வருகை தந்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் இறந்த முதியவரின் உடலை அரசு மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கிற்கு அனுப்பி வைக்காமல் சாலையோரமாகவே நிறுத்திவிட்டு அலட்சியமாக  சென்றுள்ளனர்.

  Also see... எஸ்.பி.வேலுமணி மீதான வழக்குகள் : அக்டோபர் 12-ம் தேதி இறுதி விசாரணை

  பொதுமக்கள்

  14 மணி நேரமாக  சாலையோரம் உயிரிழந்த ஒரு முதியோரின் உடல் ஆம்புலன்ஸில் வைத்து விட்டு  சென்றதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். காவல்துறையினரின் அலட்சியப் போக்க இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதைத்தொடர்ந்து இறந்தவரின் உறவினர்களை வரவழைத்து உடலை அடக்கம் செய்ய மயானத்திற்கு எடுத்துச் சென்றனர்.

  செய்தியாளர்: திருமலை, சேலம் 

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Ambulance, Dead, Dead body, Salem