ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் நேர்மையாக நடைபெறவில்லை என்றும் அநீதியை கையில் எடுத்துக்கொண்டு அராஜகத்தின் மொத்த உருவமாகத் திமுக உள்ளது எனச் சேலத்தில் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.
சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் சந்தித்துப் பேசினார். இதனையடுத்துச் செய்தியாளர்களிடம் பேசிய வைகைச்செல்வன், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் புதிய பார்முலாவை திமுகக் கடைபிடித்து வருவதாகவும், வாக்காளர்களைக் காலை முதல் அடைத்து வைத்து, மாலை வரை அமர வைத்து வாக்காளர்களைச் சித்திரவதை செய்து ஜனநாயக படுகொலையைத் திமுகச் செய்து வருவதாக விமர்சனம் செய்தார்.
திமுகவினர் வாக்காளர்களைச் சந்தித்து வாக்கு சேகரிக்க செய்த திட்டங்களைச் சொல்லி வாக்கு சேகரிப்பதை விட்டுவிட்டு வாக்காளர்களை, பட்டியலில் ஆடு மாடு போன்று அடைத்து வைத்து சித்திரவதை செய்து வருகின்றனர். தினசரி வாக்காளர்களைத் திமுகவினர் சித்தரவதை செய்து வருகிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் புதிய பார்முலாவை கொண்டு வந்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்து வருகிறார் என்ற தகவல் அதிமுகக் கிடைத்துள்ளது என்ற அவர், பணக்காரர்கள் மட்டுமே சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஆக முடியும் என்ற நிலை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்த நிலையில்,சாமானிய நபரும் உயர்ந்த நிலைக்குச் சென்று, ஜனநாயக கடமை ஆற்றமுடியும் என்று அறிஞர் அண்ணா செய்து காட்டியதாகக் கூறினார்.
ஒரு பெரிய கம்பெனி, மாநிலத்தைக் குத்தகை எடுத்துக் கார்ப்பரேட் கம்பெனி ஆக மாற்றி, வேண்டியவர்கள் எல்லாம் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்கி, அதிகளவில் பணம் செலவு செய்தல் அனைத்தும் நடந்துவிடும் என்ற புதிய கணக்கு திமுக வித்திட்டு உள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற போது அனைத்து கட்சிகளுக்கும் சுதந்திரம் இருந்தது, ஆனால் தற்போது திமுக ஆட்சியில் அனைத்தும் பறித்துவிட்டனர்.
அதிமுக மக்களைச் சந்தித்து, வாக்கு சேகரித்து வருகிறது. எளியமுறையில் நேரடியாகச் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறது. ஆனால் திமுக ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் கிழக்குத் தொகுதியில் பணமழை பெய்து வருகிறது. ஒருமாத காலமாகத் தலைமைச் செயலகத்தில் திமுக அமைச்சர்கள் இல்லை, அவர்களது வேலைகளை எல்லாம் யார் செய்வார்கள், பணப் பட்டுவாடாவில் அவர்கள்தான் அதிகம் ஈடுபடுவார்கள் என்று குற்றச்சாட்டு உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உணர்ச்சிவசமாகச் சொன்னார். மீசை வைத்த ஆண் மகனாக இருந்தால் நேரடியாகத் தேர்தல் காலத்தில் மக்களைச் சந்தியுங்கள் ஆனால் சந்திக்காமல் மக்களை அடைத்து வைத்துள்ளார்கள் என்று கேட்டார். எடப்பாடி பழனிச்சாமி குறித்துக் கனிமொழி உள்ளிட்டோர் அவதூறாகப் பேசினார்கள். எடப்பாடி பழனிச்சாமி உணர்ச்சி பிளம்பாக அந்த இடத்தில் சொல்லிவிட்டார் என்றும் வைகை செல்வன் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் நேர்மையாக நடைபெறவில்லை, அநீதியை கையில் எடுத்துக்கொண்டு, அராஜகத்தின் மொத்த உருவமாக உள்ள திமுக, அதன் அமைச்சர்கள் அரசு இயந்திரத்தை பயன்படுத்திக் கொண்டு நீதியை விலைக்கு வாங்க முயற்சித்து வருகிறார்கள் என்றும் குற்றம்சாட்டினர்.
செய்தியாளர்: திருமலை தமிழ்மணி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Erode East Constituency, Salem