ஹோம் /நியூஸ் /சேலம் /

முத்துமலை முருகன் கோயிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம்..

முத்துமலை முருகன் கோயிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம்..

நடிகர் யோகி பாபுவிடம் கைகுலுக்கி மகிழ்ந்த ரசிகர்கள்

நடிகர் யோகி பாபுவிடம் கைகுலுக்கி மகிழ்ந்த ரசிகர்கள்

உலகிலேயே மிக உயரமான முருகனை நடிகர் யோகி பாபு தரிசனம் செய்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem | Salem

சேலம் அருகே அமைந்துள்ள முத்துமலை முருகன் கோயிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம் செய்தார். 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள புத்திர கவுண்டன் பாளையத்தில் உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரத்தில் முத்துமலை முருகன் சிலை அமைந்துள்ளது. இக்கோயில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே திறக்கப்பட்ட நிலையில், தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

அந்த வகையில், சஷ்டி  தினத்தையொட்டி  முத்துமலை முருகனுக்கு  சந்தனம், திருநீர், பன்னீர்  உள்ளிட்டவைகளால்  அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து  திரைப்பட நடிகர் யோகி பாபு சாமி தரிசனம்  செய்வதற்காக  முத்துமாலை  முருகன்  கோவிலுக்கு வருகை  தந்தார். சஷ்டி  நாளில்  வருகை  தந்த  யோகி பாபுவிற்கு  கோவில்  நிர்வாகம்  சார்பில் உற்சாக  வரவேற்பு  அளிக்கப்பட்டது.  பின்  கோவில்  வளாகத்தை  யோகி பாபு  சுற்றி வந்து  முத்து மலை  முருகனை  தரிசனம்  செய்து, சிறப்பு  யாகத்திலும் பங்கேற்றார். 

அவருடன்  காமெடி நடிகர்  கணேஷ்  உள்ளிட்டோரும் பங்கேற்றனர். சாமி  தரிசனம் செய்ய  வந்த நடிகர் யோகிபாபுவை கண்ட பொதுமக்கள் அவருடன் கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Published by:Anupriyam K
First published:

Tags: Actor Yogibabu, Murugan Statue, Murugan temple, Salem, Yogibabu