ஹோம் /நியூஸ் /சேலம் /

சாலையில் தாறுமாறாக பைக் ஓட்டிய இளைஞர்.. சிக்னலில் வெளுத்து எடுத்த பெண் - வைரலாகும் வீடியோ

சாலையில் தாறுமாறாக பைக் ஓட்டிய இளைஞர்.. சிக்னலில் வெளுத்து எடுத்த பெண் - வைரலாகும் வீடியோ

சிறுவனும் ஒரு பெண்ணும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் வீடியோ வைரல்...

சிறுவனும் ஒரு பெண்ணும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் வீடியோ வைரல்...

Salem | சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சிக்னலில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணை சிறுவன் ஒருவன் தாக்கியுள்ளார்.  பதிலுக்கு அந்தப் பெண்ணும் கடுமையாக சிறுவனை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது... இருவரும் ஒருவரைஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India

சேலம் கோட்டை பகுதியை சேர்ந்த நக்மா என்ற பெண் இருசக்கர வாகனத்தில் பெரியார் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது அருகில் இருசக்கர வாகனத்தில் வந்த 12 ஆம் வகுப்பு பயின்று வரும் சிறுவன், வாகனத்தை  தாறுமாறாக இயக்கி வந்துள்ளார். அப்பொழுது அந்த பெண் சரியாக வாகனத்தை இயக்க முடியாதா என்று சிறுவனிடம் கேட்டுள்ளார்.

பின்னர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிக்னலில் இருவரும் வாகனங்களில் வந்து நின்றபோது  இருவருக்கிடையே வாக்குவாதம் முற்றியது. அப்போது சிறுவனை நக்மா என்ற பெண் திட்டியுள்ளார். உடனே வாகனத்தில் இருந்து இறங்கிய சிறுவன் பெண்ணை தாக்கியுள்ளார். பதிலுக்கு அந்தப் பெண்ணும் காலணியால் கடுமையாக தாக்கியதால் சிக்னலில் பரபரப்பு ஏற்பட்டது. அப்பொழுது பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர் உடனே இருவரையும் அழைத்து வந்து சாலையோரம் நிறுத்தினார்.

Also see... பொள்ளாச்சியில் சிக்கிய ரூ.5 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் - போலீஸார் தீவிர விசாரணை

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் நேரில் வந்து இருவரிடமும் விசாரணை நடத்தினர். அதில் சிறுவன் அஸ்தம்பட்டி ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் என்பதும் சிறுவன் வந்த இருசக்கர வாகனத்தில் போலீஸ் என்று எழுதப்பட்டிருந்ததும் தெரியவந்தது. அவரிடம் விசாரித்தபோது தந்தை காவலராக பணியாற்றுவதாக தெரிவித்தார்.

பின்னர் சேலம் டவுன் காவல் நிலையத்திற்கு சிறுவனை அழைத்து சென்று பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சாலையில் இருவரும் தாக்கிகொள்ளும்  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: District collectors, Fight, Salem, Viral Video