சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள தலைவாசல் அருகே தனியார் கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்நிலையில், அதே கல்லூரியை சார்ந்த, 3 மாணவிகள் திடீர் மயக்கம் அடைந்த நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தலைவாசல் அருகே இயங்கிவரும் தனியார் கல்லூரியின் ஹாஸ்டலில் தங்கி பயின்ற மாணவிகள் மூன்று பேர் திடீர் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்த சிறிது நேரத்தில், அதே கல்லூரி ஹாஸ்டலில் மற்றொரு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தலைவாசல் அருகே உள்ள தேவியாக்குறிச்சியில் தனியாருக்கு சொந்தமான பாரதியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், இஞ்சினியரிங் கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், ஆத்தூர், ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர், கல்லூரி வளாகத்தில் செயல்படும் விடுதியில் சில மாணவிகள் அங்கேயே தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் கல்லூரி விடுதியின் முதல் தளத்தில் முதலாம் ஆண்டு மாணவி ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்த மற்ற இரண்டு மாணவிகள் மயக்கம் அடைந்துள்ளனர். இதைப் பார்த்த சகமாணவிகள் மற்றும் விடுதி பணியாளர்கள் மூன்று மாணவியையும் மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே சிறிது நேரத்தில் அதே வளாகத்தில் உள்ள இரண்டாவது தளத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கநந்தல் அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த, பி.ஏ. ஆங்கிலம் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் விடுதியில் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்த சக மாணவிகள் மற்றும் விடுதி பணியாளர்கள் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த தலைவாசல் போலீசார் மாணவி ராக்கிங்கால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கல்லூரியில் அசிரியர்கள் கண்டித்தார்களா? வேறு ஏதாவது தொந்தரவு செய்தார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Must Read : புது வாடகை வீட்டிற்கு தேவையான பொருட்களை லிஸ்ட் போட்டு திருடிய திருடர்கள் கைது!
கல்லூரி விடுதியில் முதலாம் ஆண்டு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவமும், மாணவிகள் 3 பேர் மயக்கம் அடைந்த சம்பவமும் ஒரே நேரத்தில் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டதுடன், சக மாணவிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
உங்கள் நகரத்திலிருந்து(சேலம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.