Home /News /salem /

ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண்.. விரைந்து சென்று காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை வீரர்..!

ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண்.. விரைந்து சென்று காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை வீரர்..!

தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய ரயில்வே அதிகாரி

தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய ரயில்வே அதிகாரி

பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் பிரவீன் குமார் சாதுர்யமாக செயல்பட்டு அந்தப் பெண்ணை காப்பாற்றினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem | Tamil Nadu
சேலம் ரயில்வே நிலையத்தில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே பாதுகாப்பு படை வீரர் சாதுர்யமாக மீட்டு காப்பாற்றினார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சேலம் ரயில் நிலையத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, சனிக்கிழமை பகல் 2.05 மணிக்கு நடைமேடை 1 - இல் இருந்து கரூர் நோக்கி பயணிகள் ரயில் புறப்பட்டு சென்றது . அப்போது 60 வயது பெண் ஒருவர் ஓடி வந்து ரயிலில் ஏற முயன்றார். அப்போது அவர் கால் இடறி தண்டவாளத்துக்கும், ரயிலுக்கும் இடையே தவறி விழுந்தார்.

அச்சமயத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் பிரவீன் குமார் சாதுர்யமாக செயல்பட்டு அந்தப் பெண்ணை காப்பாற்றினார். விசாரணையில், அந்தப் பெண் ராசிபுரத்தை சேர்ந்த காளியம்மா (60) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது.

ALSO READ | வாய்தா பட நடிகை தற்கொலை - காதல் தோல்வியால் நேர்ந்த விபரீதம்!

சாதுர்யமாக செயல்பட்டு பெண்ணை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் பிரவீன் குமாருக்கு உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
Published by:Anupriyam K
First published:

Tags: Passengers, Railway, Salem, Train

அடுத்த செய்தி