Home /News /salem /

ஏரியில் மூழ்கி உயிரிழந்த நபர் - எடப்பாடியில் பரிதாபம்! 11 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கயிறு மூலம் சடலம் மீட்பு!

ஏரியில் மூழ்கி உயிரிழந்த நபர் - எடப்பாடியில் பரிதாபம்! 11 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கயிறு மூலம் சடலம் மீட்பு!

நீரில் மூழ்கி உயிரிழப்பு

நீரில் மூழ்கி உயிரிழப்பு

தண்ணீரில் குதித்து விளையாடி கொண்டிருந்தபோது பழனிசாமி தவறுதலாக ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றதால் அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Edappadi | Salem | Tamil Nadu
    எடப்பாடி அருகே ஏரியில் மூழ்கி உயிரிழந்த விசைத்தறி தொழிலாளியின் சடலத்தை, தீயணைப்புத் துறையினர் 11 மணி நேரத்திற்கு பிறகு போராடி மீட்டனர்.

    சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட எட்டிக்குட்டைமேடு, இலவம்பாளையம் கிராமம் அருகே உள்ள நரி பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. விசைத்தறி தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பழனிசாமி தனது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த தங்கவேல், செல்வம் ஆகியோருடன் சேர்ந்து நேற்று மாலை வெள்ளாளபுரம் அருகே உள்ள செங்காடு ஏரி பகுதியில் ஏரியில் குளிக்க சென்றார்.

    அங்கு சென்ற நண்பர்கள் அனைவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. மது போதையில் இருந்ததால் செங்காடு, தென்கரை மதகுப்பகுதியில் தண்ணீரில் குதித்து விளையாடி கொண்டிருந்தபோது பழனிசாமி தவறுதலாக ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றதால் அவர் தண்ணீரில்  மூழ்கினார்.

    ALSO READ | சேலத்தில் பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் 8ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை...

    இது குறித்து தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பழனிசாமியுடன் வந்த நண்பர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். எடப்பாடி பகுதியில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் ஏரி பகுதியில் பழனிசாமியின் உடலை 11 மணி நேரத்திற்கு மேலாக தேடி மீட்டனர். இது குறித்து கொங்கணாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Published by:Anupriyam K
    First published:

    Tags: Crime News, Death, Salem

    அடுத்த செய்தி