Home /News /salem /

சேலத்தில் பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் 8ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை...

சேலத்தில் பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் 8ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை...

தற்கொலை செய்துக் கொண்ட பள்ளி மாணவன்

தற்கொலை செய்துக் கொண்ட பள்ளி மாணவன்

Salem | சேலத்தில் பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் எட்டாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இது குறித்து  அஸ்தம்பட்டி காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India
சேலம் ஜான்சன்பேட்டை பிள்ளையார்நகர் பகுதியை சேர்ந்த சிவகுரு என்பவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் அரசகுரு(13) அருகிலுள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 20 நாட்களுக்கு மேலாக பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாமல்  வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் பெற்றோர்கள் அரசுகுருவை சமாதானம்செய்து பள்ளிக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று பள்ளிக்கு செல்லவேண்டும் என்று பெற்றோர்கள் கூறியிருந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற அரசுகுரு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடனே அருகில் இருந்த உறவினர்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகனின் உடலை பார்த்து கதறி அழுத்தனர்.

Also see... கற்றுத்தரும் பள்ளிகளிலேயே தீண்டாமை - ஓபிஎஸ் கண்டனம்

உடனே அஸ்தம்பட்டி காவல்துறையினர் விரைந்து வந்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பள்ளியில் மாணவனுக்கு ஏதாவது பிரச்சினை இருந்து வந்ததா அல்லது வேற ஏதாவது காரணங்கள் உள்ளதா எனவும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
Published by:Vaijayanthi S
First published:

Tags: Commit suicide, Crime News, Salem, School students

அடுத்த செய்தி