ஹோம் /நியூஸ் /சேலம் /

சேலம்: குடி போதை.. மதுபாட்டிலுடன் பள்ளி வகுப்பறைக்கு வந்த மாணவர்கள்.. ஒரு வாரம் சஸ்பெண்ட்!

சேலம்: குடி போதை.. மதுபாட்டிலுடன் பள்ளி வகுப்பறைக்கு வந்த மாணவர்கள்.. ஒரு வாரம் சஸ்பெண்ட்!

டாஸ்மாக் - பள்ளிக்கு குடிப்போதையில் வந்த மாணவர்கள்

டாஸ்மாக் - பள்ளிக்கு குடிப்போதையில் வந்த மாணவர்கள்

ஆத்தூர் அருகே மது பாட்டிலுடனும், போதையிலும்  அரசு  பள்ளிக்கு  வந்த  5 மாணவர்களை  ஒரு வாரம்  சஸ்பெண்ட்  செய்து மாவட்ட  முதன்மை  கல்வி  அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Attur, India

சேலம்  மாவட்டம்   ஆத்துார்  அருகே  காட்டுக்கோட்டை  அரசு  மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை 600 க்கும்  மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். இதனிடையே  கடந்த 19ம் தேதி பதினொன்றாம் வகுப்பு படிக்கும் 5 மாணவர்கள் மது போதையிலும் , மதுபாட்டிலுடனும் வகுப்பறைக்கு வந்துள்ளனர். இதைப்பார்த்து  மற்ற மாணவ, மாணவியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை தொடர்ந்து  மாணவர்கள் ஆசிரியர்களிடம் தகராறு  செய்துள்ளனர். இதனால் தலைமை ஆசிரியர் சுரேஷ் , மாணவர்களின்பெற்றோருக்கு தகவல்  தெரிவித்து அவர்களை  வரவழைத்து இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனார்.

இந்நிலையில் மாவட்ட  முதன்மை கல்வி  அலுவலர் முருகன் இந்த சம்பவம் குறித்து விசாரித்தார் . பின்னர்  5 மாணவர்களையும்  ஒரு  வாரம் சஸ்பெண்ட்  செய்து  உத்தரவிட்டார். இச்சம்பவம் சக மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Also see... விஜய் நடிக்கும் வாரிசு படப்பிடிப்பில் யானையால் சிக்கல்.. வனத்துறை விசாரணை!

இந்த நிலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் வழியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Attur Constituency, Salem, School students