Home /News /salem /

ஓடிசாவில் கொலை.. கொள்ளை.. சேலத்தில் கூலிவேலை - போலீஸாரை மிரளவைத்த கும்பல் கைது

ஓடிசாவில் கொலை.. கொள்ளை.. சேலத்தில் கூலிவேலை - போலீஸாரை மிரளவைத்த கும்பல் கைது

கொலை கொள்ளையடித்த 4 பேர் சேலத்தி கைது

கொலை கொள்ளையடித்த 4 பேர் சேலத்தி கைது

Salem | ஒடிசாவில் நடந்த கொலை மற்றும் கூட்டுக்கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரை சேலத்தில் சுற்றி வளைத்து போலீசார் பிடித்தனர். கொலை கும்பல் தலைவன் 4 துப்பாக்கி பதுக்கி வைத்துள்ளதாக பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Salem, India
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் கல்லிக்கோட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீடு ஒன்றில் புகுந்த ஒரு கும்பல், துப்பாக்கியால் சுட்டு ஒருவரை கொலை செய்து விட்டு, பணம் நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர். இது தொடர்பாக கல்லிக்கோட் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை தேடி வந்தனர் . இந்த கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் சேலத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஒடிசா தனிப்படை போலீசார் சேலம் வந்து ரகசியமாக விசாரித்து வந்தனர் .

குற்றவாளிகள் சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள புத்தூரில் செல்வம் என்பவருடைய விசைத் தறி கூடத்தில் வேலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து தனிப்படை போலீசார் மாநகர போலீசாரின் உதவியை கேட்டனர். கொண்டலாம்பட்டி உதவி கமிஷனர் ஆனந்தி , இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், நுண்ணறிவு பிரிவு எஸ்.ஐ ராமகிருஷ்ணன், சிவஞானம், கிருஷ்ணன், முருகன் , ராஜ்குமார் , சுப்பராயன் ஆகியோர் கொள்ளையர்கள் புத்தூரில் தங்கியிருந்த இடத்தை அதிரடியாக நேற்று முற்றுகையிட்டனர்.

ஒடிசா போலீசார் , கொலையாளிகளை அடையாளம் காட்டியதும் , உடனடியாக அவர்களை சுற்றி வளைத்தனர் . பலராம் துர்கா ( 30 ) , லட்மண் பத்ரா ( 27 ) , சுனிலா பத்ரா ( 22 ) , கிட்ரா ஷீகி ( 22 ) ஆகிய 4 பேரையும் பிடித்து விசாரித்தனர். இவர்களில் பலராம் துர்கா பயங்கரமான கொலையாளியாவார். இவரிடம் நடத்திய விசாரணையில் , ஒடிசாவில் 4 துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து 4 பேரையும் ஒடிசா போலீசாரிடம் சேலம் போலீசார் ஒப்படைத்தனர். அவர்கள் பாதுகாப்புடன் ஒடிசாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Also see... குமரியில் வரதட்சணை ஒழிப்புக்காக நூதன பிரச்சாரம் செய்த இளைஞர்கள்

வடமாநிலங்களில் கொலை- கொள்ளையில் ஈடுபடும் நபர்கள் பலர் தமிழகத்திற்கு தப்பி வருகின்றனர் . இங்கு பதுங்கியிருந்து தறி மற்றும் கட்டிட வேலைகளில் ஈடுபடுகின்றனர். இதனால் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் சேலத்தில் வேலைக்கு வந்தால் அவர்கள் குறித்து நன்றாக விசாரிக்க வேண்டும். அவர்கள் பற்றிய முழு தகவலையும் போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும் என வேலைக்கு சேர்க்கும் முதலாளிகளிடம் போலீசார் தெரிவித்து வருகின்றனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Arrested, Crime News, Murder, Odisha, Salem

அடுத்த செய்தி