Home /News /salem /

சேலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக பதுக்கி வைத்திருந்த 200 சிலிண்டர்கள் பறிமுதல்... 2 பேர் கைது

சேலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக பதுக்கி வைத்திருந்த 200 சிலிண்டர்கள் பறிமுதல்... 2 பேர் கைது

பறிமுதல் செய்யப்பட்ட சிலிண்டர்கள்

பறிமுதல் செய்யப்பட்ட சிலிண்டர்கள்

Salem | சேலத்தில் கள்ளச் சந்தையில் விற்பதற்காக குடோனில் பதுக்கி வைத்திருந்த 200 எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டு குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத் துறை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India
சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் சிலர் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் சிலிண்டர்களை பணம் கொடுத்து வாங்கி பதுக்கி வைத்து, கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பதாக சேலம் மாநகர காவல் ஆணைர் நஜ்முல் ஹோதாவிற்கு தகவல் கிடைத்தது. இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். அதனடிபடையில் சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலைய போலீசார் கடந்த சில நாட்களாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் சேலம் அன்னதானப்பட்டி கேட்டுக்காடு என்ற பகுதியில் குடோன் ஒன்றில் சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. அதனை அடுத்து அன்னதானப்பட்டி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீசார் இணைந்து நேற்று நள்ளிரவு அந்த குடோனுக்கு சென்றனர்.

அங்கு 200 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வைக்கப்பட்டிருந்தது. மேலும் பெரிய சிலிண்டர்களிலிருந்து சிறிய சிலிண்டர்களுக்கு எரிவாயுவை மாற்றும் கருவிகளும் இருந்தது. இதனை அடுத்து 200 வீட்டு சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் சிலிண்டர்கள் நிரப்பும் கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

Also see... குழந்தைகளை பாதிக்கும் காய்ச்சல் சென்னையில் அதிகமாக பரவுகிறது...

இந்த சிலிண்டர்களை பதுக்கி வைத்த மாணிக்கம் (வயது 67) மற்றும் அவரது மகன் ஆகியோரை போலீசார் பிடித்துச் சென்று விசாரித்தனர். இதன் பிறகு மாணிக்கம் சேலம் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட சிலிண்டர்களும் ஒப்படைக்கப்பட்டது.

இதனை அடுத்து தற்போது குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளர் ரேணுகாதேவி மற்றும் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். மாணிக்கம் மற்றும் அவரது மகன் சங்கர் (34) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணிக்கம் பல்வேறு தரப்பினரிடம் கூடுதலாக உள்ள வீட்டு சிலிண்டரை கூடுதல் விலை கொடுத்து வாங்கி ஹோட்டல்கள் மற்றும் திருமண மண்டபங்கள் ஆகியவற்றிற்கு சப்ளை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. சுமார் ஐந்து வருடத்திற்கு மேலாக மாணிக்கம் மற்றும் சிலர் சேர்ந்து இந்த சிலிண்டர் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர் என குறிப்பிடத்தக்கது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Crime News, LPG Cylinder, Salem

அடுத்த செய்தி