ஹோம் /நியூஸ் /சேலம் /

தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு - வீடு வாடகைக்கு கேட்பதுபோல் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிய இளைஞர்கள்

தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு - வீடு வாடகைக்கு கேட்பதுபோல் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிய இளைஞர்கள்

சேலத்தில் 2 திருடர்கள் கைது

சேலத்தில் 2 திருடர்கள் கைது

சேலத்தில் மூதாட்டியை கொடூரமாக தாக்கி நகைப்பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பாண்டியன் தெருவில் வசித்து வந்தவர்  82 வயது மூதாட்டி நஷீர் ஜகான்.   இவரது கணவர் ஹபீஸ்கான் பொதுப்பணித்துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  பிள்ளைகள் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். நஷீர் ஜகான் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 3-ம் தேதி நஷீர் ஜகான் வீட்டிற்கு இரண்டு இளைஞர்கள் வந்தனர். வாடகை வீடு பார்க்க வந்ததாக கூறி அறிமுகம் செய்துகொண்டு, இந்தப் பகுதியில் வீடு காலியாக உள்ளதா எனக் கேட்டுள்ளனர். இதற்கு நஷீர் ஜஹான் வீடு எதுவும் காலியாக இல்லை என தெரிவித்து அந்த இளைஞர்களை அனுப்பி வைத்தார்.

இதனையடுத்து அன்று மாலை இளைஞர்கள் இருவரும் நஷீர் ஜஹான் வீட்டிற்குள் நுழைந்து அவரைத் தாக்கி கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 15 பவுன் சவரன் தங்க நகைகளை பறித்து தப்பிச் சென்றுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த நஷீர் ஜகானை உறவினர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று நஷீர் ஜஹான் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Also see... வீடியோ ரெக்கார்ட் செய்து பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.. பாய்ந்த போக்சோ!

பின்னர் நகை திருட்டில் ஈடுபட்டு, நஷீர் ஜஹானை தாக்கியதாக சேலம் சின்ன திருப்பதி பகுதியைச் சேர்ந்த முஸ்தபா மற்றும் ஜான்சன் பேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Arrested, Crime News, Salem, Theif