ஹோம் /நியூஸ் /சேலம் /

பேடிஎம் மூலம் பணம் அனுப்புவதாக கூறி நூதன மோசடி.. இளம் பெண் உட்பட 2 பேர் கைது

பேடிஎம் மூலம் பணம் அனுப்புவதாக கூறி நூதன மோசடி.. இளம் பெண் உட்பட 2 பேர் கைது

சைபர் க்ரைம்

சைபர் க்ரைம்

எட்வின் தாமஸ் சேலம் மத்திய சிறையிலும், செரில் ஏஞ்சல் பெண்கள் கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் சேர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த நூதன மோசடியில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Salem, India

சேலம் மாநகர் அஸ்தம்பட்டி அருகே உள்ளது வின்சென்ட்.  இந்த பகுதியை சேர்ந்தவர் நாகராஜன்.  இவர் அஸ்தம்பட்டி பகுதியில் பிரவுசிங் சென்டர் வைத்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நாகராஜனின் பிரவுசிங் சென்டருக்கு இளம்பெண் ஒருவர் வந்துள்ளார். பின்னர் நண்பர் ஒருவருக்கு அவசர தேவை அவருடைய எண்ணிற்கு 20,000 ரூபாய் அனுப்புங்கள்.  இதற்காக பணத்தை கொடுக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து நாகராஜன் அந்த இளம் பெண் கொடுத்த  எண்ணிற்கு 20,000 அனுப்பி வைத்தார். பின்னர் அந்தப் பெண் பேடிஎம் மூலம் பணம் அனுப்புவதாக கூறி, ஸ்கேனர் மூலம் அனுப்பியவாறு தனது தொலைபேசி அறிவிப்பு ஒன்றை காண்பித்துள்ளார். பின்னர் அந்த பெண், உடன் வந்த வாலிபருடன் சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் நாகராஜன் தனது கணக்கிற்கு பணம் 20000 வந்துள்ளதா என்று பார்த்துள்ளார். ஆனால் பணம் வரவில்லை.

அந்த இளம் பெண் போலி பேடிஎம் மூலம் பணம் அனுப்பியவாறு மோசடி செய்தது தெரிய வந்தது. உடனே நாகராஜன் இதுகுறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் நாகராஜனின் பிரவுசிங் சென்டருக்கு சென்று அந்த இளம் பெண் தெரிவித்த செல்போன் எண்  குறித்து விசாரித்தனர். அதில் அந்த எண்,  சென்னை பூந்தமல்லியை சேர்ந்த கெட்வின் தாமஸ் என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது.

இவரது செல்போன் எண்ணை வைத்து எங்கு உள்ளார் என்பது குறித்து பார்த்தபோது சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் அந்த எண் இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் சீலநாயக்கன்பட்டி சென்று அங்கிருந்த எட்வின் தாமசை பிடித்து விசாரித்தனர். அப்போது அவருடன் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஷெரில் ஏஞ்சல் என்ற இளம் பெண் உடன் இருந்தார்.

இந்தப் பெண் தான் நாகராஜன் கடைக்கு வந்து 20,000 ரூபாய் மோசடி செய்தார் என்பது விசாரணையில் தெரியவந்தது. எட்வின் தாமஸ் இதற்கு உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே இருவரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்ததினர்.

Also see... 78% பள்ளிகளில் 100-க்கும் குறைவான மாணவர்கள் - சிறப்பு திட்டங்களை வலியுறுத்தும் பாமக நிறுவனம் ராமதாஸ்!

இதில் எட்வின் தாமஸ் சேலம் மத்திய சிறையிலும், செரில் ஏஞ்சல் பெண்கள் கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் சேர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த நூதன மோசடியில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

இதனால் சிறையில் உள்ள இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சேலம் மாநகர சைபர் க்ரைம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Cheating, Crime News, Paytm, Salem