ஹோம் /நியூஸ் /சேலம் /

டாஸ்மாக்கை குறி வைக்கும் 'கரூர் குரூப்ஸ்'.. மாமூல் கேட்க டிப்டாப் கெட்டப்.. உஷாரான ஊழியர்கள்!

டாஸ்மாக்கை குறி வைக்கும் 'கரூர் குரூப்ஸ்'.. மாமூல் கேட்க டிப்டாப் கெட்டப்.. உஷாரான ஊழியர்கள்!

கைதானவர்கள்

கைதானவர்கள்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே டாஸ்மாக் கடைகளில் கரூர் குரூப் என்று கூறி பணம் பறித்து வந்த நபர்களை போலீசார் கைதுசெய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India

சேலம் மாவட்டத்தில் மட்டும் 218 அரசு டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இதனிடையே டாஸ்மாக் கடையின் உயர் அதிகாரிகள் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ஒவ்வொரு சரக்கு பாட்டிலின் மீதும் அரசு நிர்ணயித்த விலையை விட 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்ய வேண்டுமென்று வாய்மொழி உத்தரவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

கூடுதல் விலைக்கு விற்பனை செயவதை நியூஸ் 18 கள ஆய்வு செய்து உறுதி செய்து, செய்தி வெளியிடப்பட்டது. இதனிடையே கடந்த ஒரு வாரமாக கரூர் குரூப்ஸ் என்று சிலர் ஒவ்வொரு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு சென்று ஒவ்வொரு மாதமும் கடை ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் மாமூல் தரவேண்டுமென மிரட்டி பணம் வசூலித்து வந்துள்ளனர்.

இதை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்றிரவு வாழப்பாடி அருகே உள்ள முத்தம்பட்டி அரசு டாஸ்மாக் கடைக்கு வந்த இரண்டு டிப்டாப் ஆசாமிகள் நாங்கள் கரூரில் இருந்து வந்துள்ளோம் என்றும் மாதந்தோறும் வழங்க வேண்டிய மாமூல் பணத்தை அண்ணன் வாங்கி வரச்சொன்னார் என்றும் தெரிவித்துள்ளனர்.

சுதாரித்து கொண்ட கடை ஊழியர்கள் அவர்களை வீடியோ எடுத்து கொண்டு இருவரையும் வாழப்பாடி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also see... எலிக்காக வைக்கப்பட்ட மின்சாரம்.. வயலுக்குச் சென்ற சிறுவன் பரிதாப பலி.. திருச்சியில் சோகம்!

அரசு டாஸ்மாக் கடையில் மாமூல் கேட்டு வந்த டிப்டாப் ஆசாமிகளை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Arrested, Salem, Tasmac