Home /News /salem /

ஆம்னி பேருந்து மீது டிப்பர் லாரி மோதி 6 பேர் உயிரிழந்த சம்பவம் : ஓட்டுநர்கள்  இருவர் கைது...

ஆம்னி பேருந்து மீது டிப்பர் லாரி மோதி 6 பேர் உயிரிழந்த சம்பவம் : ஓட்டுநர்கள்  இருவர் கைது...

சாலை விபத்து

சாலை விபத்து

Salem | ஆத்தூர் அருகே பயணிகளை  ஏற்றுவதற்காக சாலையோரத்தில் நின்ற தனியார் ஆம்னி  பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய  விபத்தில் 6  பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஓட்டுநர்கள்  இருவரை போலீசார்  கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India
சேலம்  மாவட்டம்  ஆத்தூர்  அருகே  உள்ள  பெத்தநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர்  திருநாவுக்கரசு . இவர்  தனது  குடும்பத்தினருடன்  சென்னையில் உள்ள  தனது மகள் வீட்டில் நடைபெற உள்ள மஞ்சள்  நீராட்டு விழாவிற்கு சீர் வரிசைகளை  ஏடுத்து செல்ல  திட்டமிட்டு  தனியார்  ஆம்னி  பேருந்தில் முன்பதிவு  செய்திருந்தார்.

இந்நிலையில் நேற்று முந்தினம் நள்ளிரவு பேருந்திற்காக சேலம் - சென்னை  செல்லும் தேசிய  நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்தின் வலது பக்கம் உள்ள லக்கேஜ் அறையில் சீர் வரிசியை  ஏற்றிக் கொண்டிருந்த போது  பின்னால் சேந்தமங்கலத்தில் இருந்து ஆத்தூர்  நோக்கி  வந்த  டிப்பர்  லாரி  ஆம்னி பேருந்தின் வலது பக்கம் உரசி விபத்துக்குள்ளானதில் திருநாவுக்கரசு அவரது மகன்  ரவிக்குமார் உள்ளிட்ட  6 பேர்  பரிதாபமாக  உயிரிழந்தனர்.

இது தொடர்பாக  மாவட்ட  ஆட்சியர்  கார்மேகம் , மாவட்ட  காவல் கண்காணிப்பாளர்  ஸ்ரீ அபிநவ்  உள்ளிட்டோர்  விபத்து நடந்த  இடத்தில்  ஆய்வு மேற்கொண்டனர், தொடர்ந்து  விபத்துக்கான  காரணங்கள்   குறித்து கேட்டறிந்தனர். இந்நிலையில்  தப்பியோடிய டிப்பர் லாரி ஓட்டுனரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் நாமக்கல்  மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்த  கார்த்தி என்பது  தெரியவந்தது. இதனையடுத்து கார்த்தி  மீது  வேகமாக  வாகனத்தை  இயக்கி விபத்து ஏற்படுத்தியது  உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் ஏத்தாப்பூர்  போலீசார் கைது  செய்தனர்.



தொடர்ந்து  சேலம்-  சென்னை  தேசிய நெடுஞ்சாலையில்  அஜாக்கிரதையாக வாகனத்தை நிறுத்தி பயணிகளை ஏற்றியது  தொடர்பாக  ஆம்னி பேருந்து ஓட்டுனர் பரமேஸ்வரன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

Also see... ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன் ஆவேசம்

ஆம்னி பேருந்து  ஓட்டுனரின் அலட்சியத்தால் நடந்த விபத்தின் காரணமாக 6 பேர்  உயிரிழந்த சம்பவம் அப்பகுதி  மக்களிடையே  சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Arrested, Crime News, Road accident, Salem

அடுத்த செய்தி