Home /News /salem /

சேலத்தில் பாஜக அலுவலகம் உள்பட 13 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்..

சேலத்தில் பாஜக அலுவலகம் உள்பட 13 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்..

சேலம் - ஆக்கிரமிப்புகளை அகற்றும் நெடுஞ்சாலைத்துறை

சேலம் - ஆக்கிரமிப்புகளை அகற்றும் நெடுஞ்சாலைத்துறை

Salem | மேச்சேரியில் சந்தை அருகில் உள்ள நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் சாலை யோரமாக ஆக்கிரமிப்பு செய்துள்ள 13 வீடுகள் உள்பட பிஜேபி கட்சி அலுவலகத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இடித்து அகற்றம் செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரி ஒர்க்ஷாப் காலனி தேசிய நெடுஞ்சாலை சாலையில் உள்ளது. அங்கு 755 சதுர மீட்டர் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள 13 வீடுகள், ஒரு பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் மற்றும் ஒரு பெரியாண்டிச்சி அம்மன் கோவில் ஆகியவை உள்ளது.

அரசு புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமிப்புகள் செய்துள்ள இந்த கட்டிடங்களை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இன்று  ஓமலூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் மணிவண்ணன் தலைமையில் இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

Also see...அன்னூர் நகைக்கடையில் 2 சவரன் நகை திருட்டு... சிசிடிவி காட்சிகள்



முன்னெச்சரிக்கையாக அசம்பாவிதங்களை தவிர்க்க மேட்டூர் காவல் துணை கண்களிப்பாளர் விஜயகுமார் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால்  சுமார் 2மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: BJP, Salem

அடுத்த செய்தி