முகப்பு /செய்தி /ராணிப்பேட்டை / போலீஸ்காரர் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து வழிப்பறி முயற்சி.. சைரன் அடித்ததால் கொள்ளையர்கள் ஓட்டம்

போலீஸ்காரர் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து வழிப்பறி முயற்சி.. சைரன் அடித்ததால் கொள்ளையர்கள் ஓட்டம்

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பழனிவேல்

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பழனிவேல்

மப்டியில் வீட்டுக்கு சென்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முகத்தில் மர்ம நபர்கள் பெப்பர் ஸ்பிரே அடித்து வழிப்பறி செய்ய முயற்சித்துள்ளனர்.

  • Last Updated :
  • Ranipettai (Ranipet), India

பொதுவாக தேசிய நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் வாகனத்தை நிறுத்துவது அல்லது அந்த வழியாக தனியாக பயணப்படுவது குறித்து ஒரு அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. அதற்கு காரணம் சில மர்ம நபர்கள் கொலை கொள்ளை போன்ற செயல்களில்  ஈடுபடுவதே ஆகும். அப்படியொரு சம்பவம் ராணிப்பேட்டையில் நடந்துள்ளது.மப்டியில் வீட்டுக்கு சென்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முகத்தில் மர்ம நபர்கள் பெப்பர் ஸ்பிரே அடித்து வழிப்பறி செய்ய முயற்சித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பழனிவேல். இவர் பணியை முடித்துவிட்டு ரத்தனகிரி பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஆற்காடு அடுத்த ரத்தினகிரி அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக இவர் சென்றுள்ளார்.

Read More | மருத்துவமனை விடுதியில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த டாக்டர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..

அப்போது நந்தியாலம் அருகே பழனிவேலின் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்த மர்ம நபர்கள் வழிப்பறி செய்ய முயன்றனர். இரவு நேரம் என்பதால் துணிச்சலுடன் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால்  சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பழனிவேல் ஒரு கணம் சுதாரித்து தனது இரு சக்கர வாகனத்தில் உள்ள சைரனை ஆன் செய்ததால், அதன் சத்தத்தை கேட்ட மர்ம நபர்கள் தப்பியோடினர்.

இந்த சம்பவம் குறித்து ரத்தினகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து வழிப்பறி செய்யும் என்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

top videos

    செய்தியாளர் : க.சிவா

    First published:

    Tags: Ranipettai, Theft