Home /News /ranipet /

பேருந்தின் ஜன்னல் மீது ஏறி பயணம் செய்த மாணவர்கள் - பொதுமக்கள் அச்சம்..!

பேருந்தின் ஜன்னல் மீது ஏறி பயணம் செய்த மாணவர்கள் - பொதுமக்கள் அச்சம்..!

ஆபத்தான முறையில் பயணம் செய்யும்

ஆபத்தான முறையில் பயணம் செய்யும்

இது போன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ranipettai (Ranipet) | Tamil Nadu
    ராணிப்பேட்டை அருகே அரசு பேருந்தின் ஜன்னல் மீது நின்றவாறு மாணவர்கள் ஆபத்தான வகையில் பயணம் மேற்கொண்ட வீடியோ காட்சிகள் காண்போரை பதைபதைக்க செய்கிறது. 

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே ஆற்காட்டிலிருந்து வேலூர் செல்லும் அரசு பேருந்தின் ஜன்னல் மீது நின்றவாறு மாணவர்கள் சிலர் ஆபத்தான முறையில் பயணிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

    ஆற்காட்டிலிருந்து வேலூர் வழித்தடத்தில் நாள்தோறும் ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் இந்த வழித்தடத்தில் அதிக அளவில் சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் வேலூர் நோக்கி சென்ற பேருந்தின்  படிகட்டுகளில் தொங்கியபடியும்  ஜன்னல் மீது நின்றவாறும் புத்தகப் பையுடன் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டனர். இதனை கண்டு அச்சமடைந்த பொதுமக்கள் மாணவர்களை கண்டித்து அவர்கள் கேட்கவில்லை.

    இந்த ஆபத்தான பயணம் தொடர்பான வீடியோ வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது போன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பாக தனியார் பேருந்து ஒன்றில் மாணவர்கள் இதே போல் ஆபத்தான முறையில் பயணித்தது குறிப்பிடத்தக்கது.
    Published by:Anupriyam K
    First published:

    Tags: Ranipettai, Students, Viral Video

    அடுத்த செய்தி