ஹோம் /நியூஸ் /ராணிப்பேட்டை /

தொடரும் கனமழை.. பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்த ராணிப்பேட்டை ஆட்சியர்!

தொடரும் கனமழை.. பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்த ராணிப்பேட்டை ஆட்சியர்!

பள்ளி கல்லூரிகள் விடுமுறை

பள்ளி கல்லூரிகள் விடுமுறை

School leave | காலை முதலே மழை நீடித்து வருவதால் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Ranipettai (Ranipet), India

  ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகாலை முதலே விட்டு விட்டு மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

  காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (22.11.2022) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இதன் காரணமாக,

  23.11.2022 மற்றும் 24.11.2022: வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

  25.11.2022 மற்றும் 26.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

  இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகாலை முதலே மழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Heavy rain, Ranipettai, School Leave